பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை காப்பியர் குறிப்பிடும் 'தமரிற்பெறுதல் ஆகும். இவற்றுள் களவுநெறியே சங்க இலக்கியத்தில் பாடல்பெற்றுத் திகழ் கின்றது. இது கற்புடைய காதல் களவாதலின் களவுப் பாடல்கள் காலம் கடந்த இலக்கியமாய் இலக்கணமும் அமையப்பெற்று அழியா வாழ்வு பெற்றன. பெற்றோர் பேசி முடிக்கும் திருமணப் புணர்ச்சியில் காதலர்க்கு. எண்ணக்கிளர்ச்சியும் விறுவிறுப்பும்இல்லை.(இதனால்தான் மரபுமுறையில் தெய்வயானையை மணந்த முருகன் களவு முறையில் வள்ளியைக் கைப்பற்றி வாழ்கின்றான் போலும்). இதனால் புலவரின் கற்பனைக்கும் இடம்இல்லை; எண்ணத் துடிப்பும் இல்லை. ஆதலால் சங்கச் சான்றேர்கள் ஆற்றொழுக்குபோன்ற இயல்பு மணத்தை - மரபுவழித், தோன்றும் மணத்தை - பாட முன்வரவில்லை. சங்கக் சான்றோர் பாடியதனால் களவுநெறி உயர்ந்தது என்றோ, அவர்கள் பாடல்கள் பெறாமையால் மரபுநெறி தாழ்ந்தது. என்றோ கொள்ள வேண்டா. இரண்டையும் சமுதாயம். ஒன்றுபோலவே கருதுகின்றது. பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள், கள வொழுக்கமின்றியே தனிக்கற்பு வழங்கியதில்லை’ என்று கூறி மேற்குறிப்பிட்ட இறையனார் களவியல் நூற்பாவினை சான்றாகக் காட்டுவர். இஃது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து என எனக்குத் தோன்றவில்லை. களவுவழியாகத் தான் கற்பு:அமைகின்றது என்ற ஒரேவழி நிலவியிருப்பின் மகள் தன் களவைப் பெற்றோர்க்கு மறைக்க வேண்டிய தில்லை. உடன்போக்கினை மேற்கொள்ள வேண்டியது. மில்லை. கற்புக்குக் களவு இன்றியமையாத நெறியாயின் களவினை மறை என வழங்க வேண்டியதில்லை. கள வாளர்கள் தம் மறையொழுக்கம் புலனாகி விடுமோ என்று சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் அஞ்சினதாகவே, பாடல்கள் காணப் படுகின்றன. வெறியாட்டு, அறத்தொடு, நிற்றல், மடலேறுதல் முதலிய ஒவ்வொரு கட்டத்திலும் காதலர்களிடையே இவ்வச்சஉணர்ச்சியைக் காணலாம்.