பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 55 மறையொன்று நிகழ்ந்ததாகப் பிறர் அறியாமலேயே மணம் நடந்துவிட வேண்டும் என்று தோழி தலைவனை வரைவு முடுக்கம் செய்கின்றாள்; பல்வேறுவிதமான வரைவுகடா வும் பாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன. 'தொன்றியல் மரபின் மன்றல்’ என்ற தொடர் அகப் பாட்டொன்றில் (அகம். 112) இயல்பு மணத்தைச் சுட்டி யிருத்தலால் மரபுவழித் திருமணமும் உண்டென்று புலப் படுகின்றது. காமக்களவினைப் பெற்றோர்அறியா முன்னரே மரபு மன்றல் செய்துவிட வேண்டும் என்று தோழி விரும்பு கின்றாள். நீடித்த களவின்பம் பழி தருவது என்று தலை வனை இடித்துரைக்கின்றாள். களவு நெறியே நெறியாயின் மகள் களவைப் பெற்றோர் உணர்தலும், உடன்படுதலும், கொதித்தெழுதலும் பொருளற்றது: கற்புக்கு வழி இரண்டென்று இருத்தலால் மரபு தெறிப் பட்ட பெற்றோர் சினந்தெழுந்தனர் என்பதை அறிகின் றோம். மரபு நாட்டம் பண்டைத் தமிழர்களிடையே ஊறிக் கிடந்தமையைக் குறுந்தொகைப் பாடலும் (374)கலிப்பாட் டும் (41) தெரிவிக்கின்றன. இங்ங்ணம் சங்க இலக்கியங் களில் பல்வேறு பாடல்களையும் அகத்துறைத் தோற்றத் திற்குரிய மனப்பாங்குகளையும் நோக்கினால் மரபுநெறிக் கிருந்த நன்மதிப்பு தெளிவாகும். இத்தகைய நெறியொன்று நிலவினமையைப் புறப்பாடல்களும் அரண் செய்கின்றன. சங்கச் சான்றோராகிய கபிலர், களவியல் பாடிய காதற் புலவர், பாரி மகளிரை விச்சிக்கோபாலும் வேள்பாலும் கொண்டு சென்று யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று இரந்த செய்திகள் மரபு நெறி வழக்கினைப் பறை சாற்றுகின்றன அன்றோ? இது தொல்காப்பியர் கூறும் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே" என்ற அகத்திணை நெறியுடன் ஒத்துள்ளதைச் சுட்டுகின்ற 55. தொல். கற்பியல் - 1