பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தன்றோ? எனவே, தமிழர் திருமணத்திற்குக் களவு நெறியே பன்றி தமர் கொடுப்பக் கொள்ளும் மரபு நெறியும் பழைமையுடையது என்பது அறியப்படும். மரபுநெறிக்கு மதிப்பின்றேல் பாரியின் பெருமை சிறுமைபடக் கபிலர் பெருமான் நினக்கு யான் கொடுப்பக் கொள்’ (புறம்-200) “யான் தர இவரைக் கொள் (டிெ-201) என்ற மரபு நெறியை மேற்கொள்ளா ரன்றோ? சங்கப் பாடல்களை நுணுகி ஆராயின் களவின்வழி வந்த பழைய காதலர்க்கும். களவின்வழி வராத புதிய காதலர்க்கும் இன்ப நிலையிலும் அன்பு நிலையிலும் அற நிலையிலும் யாதொரு வேறுபாடும் இல்லை என்பதை அறியலாம். இந்தக் களவு நெறியும், கற்பு நெறியும் காப் பியங்களில் அமைத்துப் போற்றப் பெற்றதையும் உன்னி னால் இரண்டின் செல்வாக்கையும் ஒருவாறு தெளியலாம். மரபுநெறிப்படி காவியம் அமைத்த இளங்கோவடிகள் களவுக் காட்சியைச் சுட்டவில்லை. திருத்தக்க தேவர் சீவ கனின் பல மணத்தைப் புனையும் போதெல்லாம் களவி னையும் காட்சி, ஐயம், தெளிவு, தேறல் முதலான துறை களையும் வைத்துப் பாடியதைக் காண்கின்றோம். தேவர் வழி வந்த கம்பநாடனும் மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமனும் சீதையும் உள்ளம் ஒன்றிக் களவுப்புணர்ச்சியைச் சுவையுற அமைத்துக்காட்டுவதைப் பார்க்கின்றோம்.சேக்கி கிழார் பெருமான் சுந்தரர் - பரவையார் திருமணத்தைக் கனவு நெறியாகவும், காரைக்கால் அம்மையாரின் திரு மனத்தை மரபு நெறியாகவும் அமைத்துப் பாடி இருநெறி களையும் சிறப்புறச் செய்தார் என்பதனையும் அறிகின் றோம். இந்தக் காப்பியக் குறிப்புகளும் இந்த இருவகை மணநெறிகளும் தொன்றுதொட்டு வருபவை என்பதை வலியுறுத்துகின்றன. இரண்டு நெறிகளையும் எண்ணி ஆராய்ந்தால்தான் அகவிலக்கியத்தின் முழு வனப்பும் தட் டுப்படும். அறவழிப்பட்ட தமிழ்ச்சமுதாயத்தின் நாகரிகத் தின் முழுவடிவமும் தெளிவாகத் துலக்கமுறும்,