பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அ தம் 2- புறப்பொருளில் இனி, புறப்பொருளில் அறம் செயற்படுவதில் நம் கருத் தைச் செலுத்துவோம். இன்றையப் பொழிவின் தொடக் கத்தில் அறம்பற்றிக் கூறிய சில கருத்துகள் புறப்பொருள் பற்றியவையேயாகும். மனத்துய்மையே அறத்திற்கு அடிப்படை என்று வள்ளுவர் பெருமான் கூறியுள்ளதைச் சுட்டினேன். மேலும், அவர் காட்டும் அடிப்படையில் ஈண்டும் குறிப்பிடுவேன். பொய்யாமொழியார், அறமே வாழ்க்கைக்கு வேண்டிய சிறப்பைத் தரும்; செல்வத்தை 'யும் தரும்; ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்க மானது வேறு எது? என்று வினவுவார். சிறப்பினும் செல்வமும் ஈனும்; அறத்தினு உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (31) என்பது அவர்தம் வாய்மொழி; திருவாய்மொழி. "அறத்தை விட ஆக்கமும் இல்லை; அதனை மறந்து கைவிடுவதைவிடக் கெடுதியும் இல்லை' என்று தாம் விடுத்த வினாவுக்கு விடையும் தருவார். அறத்தினு உங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32) என்பது அவர் வாக்கில் அவர் தந்த விடை. இங்ங்னம் அறத்தின் சிறப்பை வற்புறுத்திய பெருமான் "ஆகையால் அறச்செயல்களை இயலும் வகையால் ஓயாமல் செய்ய வேண்டும்; செய்யத்தக்க வழியால் எல்லாம் செய் தல் வேண்டும்' என்கின்றார். ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் (33) (ஒவாதே-ஒழியாமல்) என்பது அவருடைய திருவாய் சிந்திய முத்து. சிலர் 'இப்போது இஏழைப் பருவம் தானே ஆகை யூால் அறத்தைப்பற்றி இப்போது கவலை வேண்டா: பிறகு பார்த்துக் கெர்ள்ளலாம்' என்று அறம் செய்வதைத்