பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳& தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, தள்ளிப் போடுவார்கள்; காலதாமதம் செய்வார்கள். இது. தவறு; இளமை முதற்கொண்டே அறம் செய்யவேண்டும்; அவ்வாறு செய்யப்படும் அறமே, அழிவு வருங்காலத்தில் அழியாத் துணையாக நின்று காக்கும்’ என்று கூறுவார் அப்பெருந்தகை. அன்றறிவாம் என்னாது அறம்செய்க; மற்றது. பொன்றுங்கால் பொன்றாத் துணை (36) (பொன்றுதல்-உயிர் போதல்) என்பது அவருடைய திருவாக்கு. செய்த உடம்பு அழி யவும், (அவ்வறம்) உயிரோடு ஒன்றி ஏனைய உடம்பினும் சேறலின், பொன்றாத் துணை என்றார்’ என்று உரை கூறு வர் பரிமேலழகர். இத்தன்மையுடைய அறத்தினை நிலை யற்ற யாக்கை நிலைத்து நிற்கும்பொழுதே செய்ய வேண்டும் என்று இக்குறளில் வற்புறுத்துவதைக் கண்டு மகிழலாம். சமண முனிவரின் பாடல் ஒன்றினால் விரைந்து அறஞ் செய்யுமாறு ஆற்றுப்படுத்துதலை ஈண்டு நினைக்கின்றோம். வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகும்என்(று)இன்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துன ராதார்." (வைகலும் - நாள்தோறும் வைகல் - பொழுதுகழிதல், வைகும்- (மேன்மேல்) இருக்கிறதென்று;

  • நாடோறும் பொழுதுகழிதலைத் தமதுஆயுள்நாளிலே கழிதலாக வைத்து நாள் கழிதலின் உண்மை நிலைமையை அறியாதவர்கள், நாள்தோறும்நாள்கழிதல்வந்துகொண்டே இருக்க, அதனை நேரில் கண்டிருந்தும் அதன் உண்மை யை அறிந்து (இரங்கி விரைந்து)அறஞ் செய்யாதவர்களாய்.

55. நாலடியார்-39.