பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 59 நாள்தோறும் ஆயுள்கழிதலை மேன்மேல் இருக்கின்ற தென்று எண்ணிமகிழ்ச்சி அடைவர்' என்பது இப்பாடலின் கருத்து. இதில் மக்களின் அறியாமைக்கு இரங்குவது காணத்தக்கது. இளமைநிலையாமையை உணர்த்திக் காலதாமதமின்றி விரைந்து அறஞ்செய்யுமாறு உணர்த்தும் பல பாடல்கள் "அறநெறிச்சாரம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து பின்னை அறிவென்என்றல் பேதைமை -தன்னைத் துணித்தானும் தூங்கா அறஞ்செய்க கூற்றம் அணித் தாய் வருதலும் உண்டு (மின்னும் - மின்னல்போலும்; பின்னை - முதுமையில்; பேதைமை - அறியாமை, துணித்தானும் - வருந்தியேனும், துரங்காது - காலதாமதம் செய்யாமல்; கூற்றம் - எமன்: அணித்தாய் - இளமையிலேயே) என்பது, மின்னல் போலும் இளமைப் பருவமானது நிலைத்திருக்கும் என மகிழ்ந்து முதுமையில் அறத்தினைப் பற்றிக் கருதுதல் அறியாமையாகும். எமன் இளமை பிலும் வருதல் உண்டு. ஆதலால் தனது உடலை வருத்தி யேனும் ஒவ்வொருவரும் காலதாமதமின்றி அறம் செய் தல் வேண்டும் என்று இதில் தெருட்டுதலை அறியலாம். இளமை நிலையாமையை, முற்றி யிருந்த கனியொழியத் தீவளியான் நற்காய் உதிர்தலும் உண்டு.”* (தீவளி - கடுங்காற்று; நல்காய் - நல்ல காய்கள்) 5 அறநெறிச்சாரம்-21; பிறபாடல்கள்-16, 17,18, 19, 20, 24, 26. 58. நாலடியார் - 19,