பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每{} தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்ற பாடற் பகுதியில் பருவம் முதிர்ந்த கிழவர்கள் மாத்திரமேயன்றி உடம்பு வலிய இளையவர்களும் இரக்க மற்ற எமனால் இறத்தலும் உண்டு என்று கடுங்காற் நினால் முதிர்ந்துள்ள பழங்கள் மாத்திரமேயன்றி நல்ல காய்களும் உதிர்தலும் உண்டு’ என்ற உவமையால் பெற வைக்கும் நேர்த்தி கண்டு இன்புறற் பாலது. சிலப்பதிகாரத்தில் ஒரிடத்தில் அறம் வற்புறுத்திப் பேசப்பெறுகின்றது. மாடல மறையோன் சீறி எழுந்த செங்குட்டுவன் சீற்றத்தைத் தணிக்கும் முறையில் இதனை எடுத்தோதுகின்றான். யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை முதலியவற்றை ஏதுக் களால் எடுத்துக்காட்டி உயிரின் தன்மையை விளக்கி, "இன்றே வேள்வி செயல் வேண்டும்’ என்று தூண்டும் முறை யில், வானவர் போற்றும் வழிநினக்கு அளிக்கும் நான்மறை மருங்கில் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும். "நாளைச் செய்குவம் அறம்' எனின் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்; இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை’’’ என்று கூறுவதைக் காணலாம். இதுநாள்வரை வாழும் நாளை வரையறுத்தவர் உலகெங்கினும் இலர்' என்று காட்டிய உண்மை நம் சிந்தனைக்குரியது. அறம் செய்தலை வலியுறுத்தும் போக்கில் வள்ளுவர் கூறுவதை நோக்குவோம். அறம் ஒன்றே மனச்சான்றை மகிழ்விக்கும்; அந்த மனச்சான்றின் மகிழ்ச்சியே உண்மை யாகும். தன் நெஞ்சே தன்னைச் சுடும் (293) என்ற 58. சிலப். நடுகல்காதை - 175 - 182