பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\f இன்றைய வாழ்க்கை நிலையைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து அக்கால இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலையில் எங்ங்னம் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அகப்பொருளில் அறத்தைப்பற்றி பேசுங்கால் பால தாணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' (தொல். கள. 5) என்னும் நூற்பாவில் கிழவனும் கிழத் தியும் என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் பாங்கில் முன்னதாகக் காதலித்தவர் யார் என்ற வினாவுக்கு இடம்வைக்கவில்லை என்பது சிந்திக்கத் தக்கது (பக்.28) என வரைந்திருப்பது ஆசிரியர் ஆய்வுத் திறனுக்கு ஒர் காட்டு. - - 'அறத்தொடுநிற்றலையைப் பக்தி இலக்கியத்தோடு புணர்த்திப் பேசுங்க்ால் ஆசிரியரது சமய இலக்கிய அறிவு நன்கு வெளிப்படுகிறது. குறிப்பாக வைணவ இலக்கியத் திலும், அந்த மரபுகளிலும் உள்ள ஆழ்ந்த பயிற்சி ஆய்வுக்குத் துணை செய்கிறது(பக்.-30). வெளிநாட்டைப்பற்றிக்கூறிவருங்கால் சமுதாயச்சடங் கிற்கும், கற்பொழுக்கத்திற்கும் நடக்கும் போராட்டமாக வரைந்திருப்பது அழகான ஒன்று. - இல்லற இயல், துறவறவியல் என்னும் இரண்டிற்கும் பொதுவானவையாக அழுக்க்ாறு, இன்னாச் சொல், அவா, வெகுளி என்னும் நான்கினையும் நீத்தல் என்றுகூறப்படுதல் வேண்டும் என்ற உரைத்த ஆசிரியர் (பக்-64) இக்காலத்துச் சில போலித் துறவிகள் செல்வம் சேர்ப்பதையே குறிக் கோளாகக் கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டு கின்றார். » கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்' என்னும் கம்பன் சொற்றொடரில் வரும் க்ண்களால் என்ற சொல்லுக்குப் புத்துரை வழங்கிய ஆசிரியர் (பக்.73) பாராட்டுக்குரியவர்.