பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 台葛 வாறு மனச்சான்று ஒருவனைச் சுடும்போது தன்நெஞ்சம், தானறி குற்றப்படின் (272) என்றவாறு அது குற்றம் சாற்றும் போதும், பூதங்கள், ஐந்தும் அகத்தே நகும்’ (271) என்றவாறு அது 'வஞ்சமனத்தான் படிற்றொழுக் கத்தை எள்ளி நகைக்கும்போதும், ஒருவன் கண்ணுக் கும் செவிக்கும் முக்கிற்கும் நாக்கிற்கும் உடம்பிற்கும் இன்பமாக எவ்வெவற்றைத் தேடித்தரினும், அவை இன்பம் நல்கா; அவற்றால் மனம் அமைதியுறாமல் மேன்மேலும் அலைந்து வருந்திக் கொண்டே இருக்கும். ஆகையால் அறத்தால் வருவதே உண்மை இன்பமாகும்; மற்றவை எல்லாம் போலி இன்பமாகும்; புகழும் இல்லாதவை யாகும். அதனால் ஒருவன் வாழ்நாளில் செய்யத் 'தக்கது அறமே செய்யாமல் ஒதுக்கத் தக்கது பழியே. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல (39) (புறத்த - துன்பத்தினிடத்த) செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி (40) (உயற்பாலது - ஒழிதற் பான்மையது; ஒரும் என்பன இரண்டும் அசை நிலை) என்ற பொய்யாமொழிகளை நம் மனம் அசை போட்டு மகிழட்டும்; அதனால் உண்மை ஒளி தோன்றட்டும். அறம் - வகையும் தொகையும் அறம் பற்றிப் பேசும் போது முப்பால் எனப்படும் திருக்குறள் முழுவதையும் அறம் என்றே சொல்லும் வழக்கு உண்டு என்பது நம் நினைவிற்கு வருகின்றது. இதனால் அறம் என்பது பொருளையும் இன் பத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருத்தல் தெளிவா கின்றது. இதனால் அறம்' என்பது தொகை எனவும், அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலும் வகை எனவும்