பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை ஒரு முறைமையைக் கொள்ள இடம் தருகின்றது. இனி அறத்துப்பாலை மட்டிலும் எடுத்துக் கொண்டால் இல் லறம் இருபது அதிகாரங்களிலும் துறவறம் பதின் மூன்று அதிகாரங்களிலும் கூறப்பெற்றிருப்பதைக் காணலாம். துறவற இயல் நோன்புப் பகுதி ஞானப் பகுதி என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. நோன்புப் பகுதியில் ஒன்பது அதிகாரங்களும், ஞானப் பகுதியில் நான்கு அதி காரங்களும் உள்ளன. மக்களில் துறவற நிலைக்கு உயர் வோர் சிலராகவே இருப்பதால் துறவற இயலின் அதி காரங்கள் சுருக்கமாகவே உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் - இவற் றில் வரும் செயல் முகமான கடமைகள் பொதுவாக அறச்செயல்கள் என்று கருதப்பெறுகின்றன. இதனால் செய்கை ஒவ்வொன்றும் அறத்தின் வகையாகின்றது. அந்த அறச்செய்கைகட்கும் வகைகள் உள்ளன. வகை கட்கு அறத்துப்பாலில் வரும் கடமைகள் முக்கியமானவை. இல்லறவியலில் குறிக்கப்பெறும் அறச் செயல்களின் வகைகள் பின்னும் முதன்மையானவையாக அமைகின் றன. அவற்றிற்குரிய பக்குவத் திறன்கள் துறவற இயலின் நோன்புப் பகுதியிலும், ஞானப் பகுதியிலும் வருகின்றன. மேலும் அப்பக்குவப் பகுதிகள் சமய நெறிகளிலும், குறிக்கப்பெறுகின்றன. இக்காரணத்தால் 'சீவன்முக்தி' வாழ்க்கை என்று கருதப்பெறும்; பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்களின் இல்வாழ்க்கையைப் போன்றது அது. திருக்குறள் இல்லற இயலில் வரும் நடுவு நிலைமை’ 'அடக்க முடைமை', 'ஒழுக்க முடைமை", 'பொறை யுடைமை", வெஃகாமை', 'பயனில சொல்லாமை' போன்ற அதிகாரக் குறிப்புகள் யாவும் பிறவும் துறவுத் தகுதி பெறும் சிறந்தோர்க்கே இயலக் கூடியவை என்பது தெளிவு. ஆதலால், அறத்தின் வகைகள் என் பவை சிறப்பாக இல்வாழ்க்கைக் கடமைகளையே முக்கிய