பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 台剑 மாகக் குறிக்கும். இல்வாழ்வானின் நோன்பும் ஞானமும் அறத்துப்பாலில் வரும் துறவற இயல்புகள். அறத்தின் வகைகள் இல்வாழ்வாரின் மிகுநுட்பமான கடமை வகை கள் ஆகும். அறத்தின் செய் வகைகள்: வள்ளுவர் பெருமான் குறிப் பிடும் அறத்தின் செய் வகைகளை இனிக் காட்டுவேன். மனத்தால், சொல்லால் அறத்தின் இயல்பும் அடிப்படையும் கொள்ள வேண்டும் என்றாலும், செயல் வடிவில் தோன்றும் அறத்திறனே, முதன்மையாக அறம் எனக் கொள்ளப்படும். செய்கைக்கு உதவாத நிலையில் மனத்தாலும் வாக்காலும் அறத்திறன் இருக்கும்போது, அறத்திறனால் யாருக்கும் பெரும் பயன் இல்லை என்பது வெள்ளிடைமலை. மனத் தறமும், சொல்லறமும் செயலில் வரும்போதுதான் அவை * அறச் செயல் என்று சிறப்பிக்கப்பெறும்; போற்றப்பெறும். 'அறன் வலியுறுத்தல்’ என்ற பாயிர அதிகாரத்தில் அறத்தைச் செயலின்மேல் வைத்தே ஆசிரியர் பல குறள் களில் பகர்கின்றார் இந்தத்தொகை அதிகாரத்தில் வரும் அறவினை ...செல்லும்வாயெல்லாம் செயல்(3). அறம் செய்க (36) நன்று (அறம்) ஆற்றின்(38). செயற்பாலது அறம்(40) என்ற குறள்களில் இப்போக்கைக் காணலாம். அழுக்காறு முதலியவற்றிற்குக் காரணமான மன மாசு கூடாது என்று கூறும் குறள்(34) அறச் செயலுக்கு அடிப்படை கூறியதாகக் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, மனத்தறமாகிய அதுவே அறம் என்று வரை படுத்திக் கூறியதன்று என்பதை நாம் உளம் கொள்ள வேண்டும். மனஅழுக்குடன் இருப்போர் மேற்பூச்சாகப் பல செயல்களை மேற்கொள்ளலாம். இவை பிறர்க்குப் பயன்தருவனவாக இருக்கலாம்; நற்செயல் களாகவும் தோன்றலாம்; முறைபொருந்திய செயல்கள