பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, வும் காணப்பெறலாம்; கடமைச் செயல்களாகவும் கருதப் பெறலாம். ஆயினும், அவை அறம் ஆ" என்பது வள்ளு, வர் கருத்து. இவற்றை அவர் வீண் ஆரவாரமானவை' என்றே கருதுகின்றார். ஈண்டு தூய்மைக்கு முதல் இடம் தருகிறதையும் அத்துய்மையின் அளவே பயன் எனவும். வரையறுத்துக்காட்டுவதை நாம் கருத்தில் இருத்துதல் வேண்டும். மனம் மாசு இல்லாமல் செய்யும் அறமே சிறந்தது. என்று வற்புறுத்தும் வள்ளுவப் பெருந்தகை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல்' என்ற நான்கையும் கொண்டு உள்ளத்தின் அடிப்படை அழுக்குகளாகத் திரட்டி காட்டுவார். இதில் வெகுளியை அடுத்து இன்னாச்சொல் வருதல் இன்னா செய்தலுக்கு வெகுளி காரணம் என்பது. புலப்படுகின்றது. இவண் கூறப்பெற்ற அழுக்காறு’. 'இன்னாச் சொல் என்ற இரண்டும் இல்லற இயலிலும், அவா, வெகுளி என்ற இரண்டும் துறவற இயலிலும் அமைந்துள்ளன. ஆனால் கூர்ந்து நோக்குமிடத்து இல்லற. இயலில் வரும் இரண்டு அதிகாரப் பொருள்களாகிய 'அழுக்காறு இன்னாச் சொல் என்பவற்றின் இடையே தான் துறவற இயலின் இரண்டு அதிகாரப்பொருள்களாகிய அவா வெகுளி என்பன இக்குறளில் தொகுத்துக் கூறப் பெறுகின்றன. இதிலிருந்து ஓர் உண்மையை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த நான்கு அதிகாரப் பொருள் களும் அறன் வலியுறுத்தல் என்னும் பாயிர அதிகாரத்தில் தொகுப்பாக வந்துள்ளன; வகுத்துக் கூறுமிடத்து இடை யிலுள்ள அவா வெகுளி என்பன துறவறவியலுக் காகப் பிரித்துக் கொள்ளப்பட்டன என்றாலும், இந்த நான்கும் இரு நெறியாளர்க்கும் பொருந்தும் என்பதே. என் கருத்து. காரணம், துறவற நெறியினரும் தம். அமைப்புக்கு என்று தனி நிலையமும் குழலும் அமைத்துச் செல்வம் சேர்ப்பதே சிறப்புறுவதற்கு வழி என்று காணும் காட்சியாக இருக்கும் போது துறவிகளுக்கும் பாசம்ப்ற்று.