பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫台 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை முதற்பகுதியில் இல்வாழ்வான், வாழ்க்கைத்துணை, மக்கட் பேறு என்ற மூன்றுஅதிகாரங்களை அடக்கலாம். இவை மூன்றிலும் இல்லறம் புரியும் குடும்பத்தாரை - அதாவது குடும்பத்தின் உறுப்பினரைப்பற்றி எடுத்தோதப்படு கின்றன. இவற்றில் நம் கவனத்தைச் செலுத்துவோம். 1. இல் வாழ்வான் : இல்வாழ்வான்’ என்ற சொல் இல் வாளோடு கூடி வாழ்க்கைக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து கொண்டு சிறந்த மகனாய் வாழ்கின்றவன் என்பது பொருள். இவ்விடத்தில் அறச்செயல்கள் புரிந்து வரும் சிலரது நிலைகளைக் கருத்தில் கொள்வது இன்றியமை யாதது. திருமணம் புரிந்துகொள்ளாதவர்கள் சில பொதுப் பணிகள் புரிந்துகொண்டு உயிர் வாழ்ந்து வந்தாலும் உண்மையில் அவர்கள் வாழாதவர்கள், அதாவது, வாழ்வு இழந்தவர்களாகின்றனர். திருமணம் புரிந்து கொண்டவர் களில் மனைவி கணவனை இழந்த நிலையிலும் கணவன் மனைவியை இழந்த நிலையிலும் அவர்கள் உரியநோன்பு களைப்புரிந்து உயிர்வாழ நேரிடினும், அவர்களும் வாழ்க்கை வாய்ப்பு அற்றவர்களாவர். திருமணம் புரிந்துகொண்ட வர்கள் மறுமணம் செய்துகொள்ள நேர்ந்து பல அறசெயல் களைச் செய்துகொண்டு நீண்டகாலம் வாழ்ந்தாலும், உண்மையில் அவர்களும் வாழாதவர்களே, அவர்களுடைய செயல்களும் முழுஅறம் அல்லாதனவேயாகும். அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவொர்க் கெதிர்த்தலும் தொல்லோர்சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை: என்று இளங்கோவடிகள் கண்ணகியின் வாயில் வைத்துப் பேசுவதால் இதனைத் தெளியலாம். இல்வாழ்க்கையில் காதலர் இருவரும் ஒருமனப்பட்டு அறச்செயல்கட்காக தியாகம் செய்து வாழ்கின்றனர். (திருக்குறளில் மறுமணம் புரிந்துகொள்வதற்கு விதியில்லை).இங்குக் காதலர்கள் இரு 61. சிலப். கொலைக்களக் காதை - (71.73).