பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 67 வரும் தம்மை மறந்து பிறரிடம் அன்புசெலுத்துகின்றனர். இருவரும் ஒருமனம் உடையவராய் உலக நன்மை கருதி வாழும் சிறப்பை இல்லறம் காட்டுகின்றது. இங்குக் கண வனும் மனைவியும் ஒத்த மனமுடையவராய் வாழ் கின்றனர். ஆதலின் இன்ப துன்ப உணர்வுகளையும் மற்ற மனநிலைகளையும் ஒருவர் மற்றவருக்கு மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இங்கு இடம் இல்லை. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் வாழ்ந்த இல்லற வாழ்க்கையை இளங்கோ அடிகள், வார்ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி மறப்பு:அரும் கேண்மையொடு அறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெரும்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமொடு ஒரு தனிப் புணர்க்க” (வார்ஒலி. நீண்டதழைத்த கேண்மை - சுற்றம்; அறப் பரிசாரம் - அறநெறியாளரை ஒம்பல்; புறந்தரூஉம்பேணும்; வேறுபடு திரு- நானாவிதமான செல்வம்; வீறு பெற- உயர்ச்சிபெற; ஒருதனி புணர்க்க - வேறாகஇருக்கச் செய்ய} என்றுவிளக்குவர். தனித்தனியாக வாழும் வாழ்க்கையில் உணரும் உணர்வெல்லாம் இத்தகைய இல்லறவாழ்விலும் உணரலாம். இங்கு ஒருவர்குறை மற்றொருவருக்கு நன்கு புலப்படுமாதலால் இன்னும் தெளிவாக மனநிலை விளங். கவும் இடம் உண்டு. இதன்காரணமாகவே, மனம் வாழும் நிலையையும் அதற்கு உரிய அறநெறியையும் தனி வாழ்க்கை வாயிலாக வள்ளுவர்பெருமான் முதலில் இல்வாழ்க் கையை விளக்குகின்றார்; பிறகு அதன் சார்பானவைகளை யும் விளக்குகின்றார். இந்தப் பயிற்சியின் பயனாகப் பரந்த அன்பு அருளாக வளர்ந்து பற்றற்ற வாழ்க்கையான துற 62. சிலப். மனையறம் படுத்த - (84-88.)