பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வற வாழ்க்கையாக மாறுகின்றது. இதனை வள்ளுவர்பெரு மான் அருளென்னும் அன்பீன்குழவி (757) என்று பேசு வர்.இத்தகைய துறவற வாழ்க்கையை இப்பொழிவின் இறு தியில் விளக்குவேன். இவற்றையெல்லாம் ஆழ்ந்து ஆராய் வோமாயின் வள்ளுவர் பெருமான் அறத்துப்பால் முழு வதிலும் மனத்தின் வாழ்வையே விளக்குகின்றார் என்றும், அம்மனம் தூய்மைப் படுவதற்கு வேண்டிய அறநெறியை அறிவுறுத்துகின்றார் என்றும் அறியமுடிகின்றது. 2. இல் வாழ்க்கை அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கை யின் பண்பாகும்; அறத்தைப் போற்றி வாழ்வதே அதன் பயனாகும்: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (45) என்பது அறநெறி அருள்மொழி . அவர்காட்டும் அறநெறி பில் வாழ்ந்தால் போதும்; வேறுநெறியில் (துறவறநெறி யில்) போய்ப் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லை(46). அறத்தின் பயன் எல்லாம் பிறங்கும் இல்வாழ்க்கை வாழ் கின்றவனே வாழ முயன்றவர்கள் எல்லோரிலும் தலை யானவனாகத் திகழ்வான் என்பார் (47). இல்லறம் துறவறம், என்ற இரண்டிலும் அறப்பண்பு இழையோடுமாறு வாழவேண்டும் என்பதை வள்ளுவம் உணர்த்தும். ஆயின் இந்த இரண்டு நெறிகளிலும் எது சிறந்தது என்ற வினா நம்பால் எழலாம். இதுபற்றிச் சிந்திப்போம். பொதுவாக நம்முடைய வாழ்க்கை தொடங்குவது இல்லறத்தில் அதுவும் இளமைக்காலத்தில், நம்முடைய வாழ்க்கை முடிவது துறவறத்தில், தன்னை யும் காத்துப் பிறரையும் - துறந்தார், நல்கூர்ந்தார், இறந்தார், மாணிநிலையிலும், வானப்பிரத்த நிலையிலும், முற்றத்துறந்த யோகநெறியிலும் வாழ்பவர்களையும்,தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவர்