பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் - 69 களையும் - காக்கவல்லது இல்லறம். அதற்கு உழைத்துப் பொருளிட்டும் ஆற்றலும், பகுத்துண்ணும் திறனும் வேண் டும்; இளமைக்காலமே இதற்கு ஏற்றது. ஆற்றலும் திற னும் குறைந்த முதுமைக் காலத்தில் முன்போல் பொரு விட்டவும் பகுத்துண்ணவும் இயலாத நிலைமை வந்தெய் தும். அப்போது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு அனைத்தையும் துறந்து வாழ நேரிடும். இந்த இரண்டில் எது கொள்ளத் தக்கது என்று ஆய்வதில் பயன் இல்லை. ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்று ஒப்பிட்டுக் காணலாம். அவ்வாறு காணும்போது எதனால் பிறர்க்குப் பயன் மிகுதி என்று ஆராய்ந்து நோக்கவேண்டும். மற்றவர்களையும் அறவழியில் வாழச் செய்து தானும் அறநெறியிலிருந்து வழுவாது வாழவல்லது இல்வாழ்க்கை என்பது தெளிவு. தாம் மட்டிலும் நன்மை அடைவதற் காகத் தவம் செய்வோர். மேற்கொள்வது துறவற வாழ்க்கை. இவற்றுள் பின்னதை விட முன்னதே சிறந்தது என்பது வள்ளுவர் கருத்து. ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (48) என்பது அவர் திருவாக்கு. இல்லறநெறிப்படி வையத் தின்கண் வாழ்பவன், வையத்தானேயானாலும் உம்பர் உலகில் உறையும் தேவருள் ஒருவனாகவே கருதப்பெறு வான் (50) - - - * - - 3. வாழ்க்கைத்துணை நலம்: இல்லறம் நல்லறமாகச் சிறக்க வேண்டுமானால் அதற்குத் தக்க நல்ல் பண்புடைய வாழ்க்கைத்துணை அமைய வேண்டும். அங்ங்னமே நல்ல மனைவிக்குத் தக்க கணவனும் வாய்க்க வேண்டும். தக்க நல்ல பண்புடைய வாழ்க்கைத்துணை பற்றிச் சமண முனிவர் கூறுவது: -