பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்கு உடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி, இடன்அறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்" (காதலன் - கணவன்; காதல்வகை - ஆசையின்படி; உட்கு - அச்சம், ஊராண் - உபகாரியாம் தன்மை; உட்கி - அஞ்சி) இதில், கண்ணுக்கு இனிய உருவமுடையவளாகியும், கண வனது ஆசையின்படி தன்னை அலங்கரித்துக்கொள்பவ ளாகியும், அச்சத்தை உடையவளாகியும், உபகாரியாந்: தன்மையுடையவளாகியும், தன் கணவனிடத்து அஞ்சி சமய மறிந்து பிணங்கி, இன்பமுண்டாம்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்ற கபடமில்லாத இன்சொற்களையுடைய வளாகியும் இருப்பவளே மனைவியாவாள்' என்று கூறப் பெற்றிருத்தல் அறியத்தகும். கழிவினும் வரவினும்’ (தொல். கற்பியல்-12) என்ற நூற்பாவில் இச்செய்யுளை எடுத்துக்காட்டி, "கட்கு இனியாள் - இது காமம்; வகை புனைவாள் - இது கற்பு; உட்குடையாள் - இது ஒழுக்கம்: ஊராண்மை - இது சுற்றம் ஒம்பல்; ஊடி உணர்தல்-இது அல்லவை கடிதல்’ என்று விளக்குவர் நச்சினார்க்கினியர். வாழ்க்கைத்துணை இல்லறத்திற்குத் தக்க நல்ல பண்பு டையவளாகவும், தன்னைத் துணையாகக் கொண்ட கண வனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துபவ: ளாகவும் இருத்தல் வேண்டும் என்பார் வள்ளுவப்பெருந் தகை. மேலும் அவர், இவ்வாறு இல்லறத்திற்கு ஏற்ற பண்பு அவளிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்க்ை வேறு எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பய. னில்லை என்றும், கூறுவார். 63. நாலடி-384