பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 'அன்பின் சிறப்பையும் தன்னலத்தினால் ஏற்படும் தீமைகளையும் ஆசிரியர் நன்கு விளக்குகின்றார் (பக்-82) விருந்தோம்பலைச் சொல்லுங்கால் இக்காலத்தில் விருந்து என்ற பெயரில் நடக்கும் ஆடம்பரங்களையும், உண்மையான விருந்து வழங்க இயலாத நிலையையும் குறித்து ஆசிரியர் கூறியிருப்பது அவரது துணித்த பார்வைக்கு ஓர் எடுத்துக் காட்டு (பக்-88). செய்ந்நன்றி அறிதல்' என்னும் தலைப்பின் கீழ், 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது’ என்ற குறளுக்குக் கணித வாய்பட்டில் விளக்கம் தந்திருப்பது (பக்-98; 99) புதுமையான, ஆசிரிய ரின் சிந்தனைக்கு ஒர் உரைகல்லான எடுத்துக்காட்டு. பொறையுடைமையைப் பற்றிக் கூறுங்கால், தருமனது பொறுமையை விளக்கும் முகத்தான் வில்லிபாரதப் பாடல்களையும், பாஞ்சாலி சபதப் பாக்களையும் எடுத்துக் காட்டியிருப்பது (பக் 132-135) சிறப்பான ஒன்று. அவாவறுத்தல், வெஃகாமை, கள்ளாமை என்னும் மூன்று சொற்களும் ஒருபொருளுடையன போலத் தோன்றி லும் அவை தம்முள் துணுகிய வேறுபாடுடையன என அழகாகக் குறித்துள்ளார். துறவறவியலில், செவிச் செல்வத்தைப் பற்றிக் குறிப் பிடும்பொழுது, அந்தச் செல்வம் பொருட்டாவின காயினும் அருட்செல்வத்தினும் ஒருபடி உயர்ந்தது என்பதை விளக்கும் பாங்கு அழகியதாகும் (பக். 1 56-57). புலால் மறுத்தல் பற்றி நீதிபதி ஒருவர் கூறிய கருத்து வள்ளுவத்திற்கு முரணானது என நிலைநாட்டியிருப்பது ஆசிரியரின் Qāstāranāāgarsaság (Courage of conviction). எடுத்துக்காட்டு (பக். 163-64) 3. 'தவம்’ அனைவர்க்கும் பொதுவானதென்றும், இல்லறத்தினரும் இதனை முயலுதலே சிறப்பான தென்றும்