பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 71 மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (52) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் (52): என்று அவர்தம் திருவாக்குகள் இவற்றைப் புலப்படுத்தும், இல்லறம் நடைபெறும் இல்லத்துக்கு உரியவள் பற்றிச் சமண முனிவர் கூறுவது: உள்ளத்து உணர்வுடையாள், ஒதிய நூல் அற்றாள்; வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்-தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நானுடையாள் பெற்ற நலம்." (உணர்வு - நல்லறிவு; நூல்அற்று - நூல்போலும்; வள்ளன்மை - ஈகைத்தன்மை, ஒண்பொருள்- மிக்க செல் வம்; வாள்- வாளாயுதம்) இதில் 'இல்லத்தரசி தெளிந்த அறிவுடையான் கற்ற நூல் போலவும்,கொடையாளிக்குக்கிடைத்த செல்வம் போலவும் சுத்தவீரன் கையில் பிடித்த வாள் போலவும் இருத்தல் வேண்டும்’ என்று கூறுவதைக் காணலாம். தொல்காப்பியக் கற்பியல் நூற்பா-5 இல் 'அஞ்ச வந்த உரிமைக்கண் ணும்' என்ற பகுதிக்கு இப்பாடலை எடுத்துக்காட்டி, இப் பாடலில் நலம் என்றது, இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தால் பலவகையாகக் காணலும், பிறர்க்குத் தான் செய்தலும், கற்புச் செய்தலும் என்ற மூன்றினையும் விளக்கிப் பாடலிலுள்ள மூன்று கருத்துகளையும் இம்மூன்றுடன் பொருத்திக் காட்டித் தெளிவுபடுத்துவர். மேலும், இதனைத் தலைவன் தலைமகள் உரிமைகளை வியந்து கூறும் கூற்றாகவும் கொள்வர்; இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே ன்எறு வற்புறுத்தும் வள்ளுவர்பெருமான் பெண்ணின் தனிச் 64. நாலடி. 386