பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை சிறப்பையும் எடுத்துக்காட்டுவார். கற்பு என்னும் உறுதி உண்டாகப்பெற்றால் பெண்ணை விடப் பெருமையுடைய நிலை வேறுஇல்லை(54). பெண்கள் நிறை என்னும் பண் பினால் தம் நெஞ்சத்தை நெறியில் நிறுத்திக் காத்துக் கொள்ளும் காப்பே மிகச் சிறந்த காப்பாகும். இதை நோக்க மதில்முதலியன அமைத்துக் காப்பவர்களின் காவல்முறை பயனற்றதாகும் (56). இந்தப் பண்பினால் தன்னையும் காத்துக் கொண்டு, தன்னைத் துணையாகக் கொண்ட கண வனையும் காத்து, இருவரும் ஒருமனத்தோடு நடத்தும் இல்வாழ்க்கையின் நன்மை மிக்க புகழையும் காத்துச் சோர்வு இல்லாமல் வாழ்கின்றவளே இல்லத்தரசி என்னும் சிறப்புடையவள் ஆவாள்(57). இவற்றால் இல்லறவாழ்க் கைக்கு முக்கிய விசை (Main spring)போன்றவள் பெண்ணே என்பது தெளிவாகின்றது. இல்லற வாழ்க்கைக்குச் சார் பானவற்றுள் தலையானவள் வாழ்க்கைத்துணையாவாள். ‘வாழ்க்கைத்துணை’ என்றுகூறாமல், வாழ்க்கைத்துணை நலம்’ என்று கூறியதில், நலம்’ என்ற சொல்லாட்சி மிக அற்புதமாக அமைந்திருக்கும் சிறப்பை உன்னுந்தோறும் புத்தொளி காட்டி நிற்கின்றது. வள்ளுவர் கற்ப்ைபற்றிப் புகழுங்கால், பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்?(54) என்று கூறுவார். இந்தக் கற்பைச் சீதையின்மேல் வைத்து அநுமன் வாய்மொழியாக கம்பநாடன் கூறுவதைக் காண் போம். அங்கதன் தலைமையில் சீதையை நாடித் தென் திசைச் சென்ற வாணர வீரர்கள் வெற்றியுடன் திரும்புகின் றனர். அநுமன் வரவை நோக்கியிருந்த் இராமனின் மொய் கழலைத் தொழாமல், முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன் கையினன்' என்ற நிலையில் அதுமனைக் காண் கின்றனர். குறிப்பினால் அறியும் திறன்படைத்த இராமனும்