பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 73 வண்டுஉறை ஒதியும் வலியள்; மற்றிவன் கண்டதும் உண்டுஅவள் கற்பும் நன்றெனக் கொண்டனன்?" இராமனை அடைந்த அதுமனும், 'கண்டனென் கற்பினுக்(கு) அணியைக் கண்களால் ' என்று விநயமாகக் கூறுகின்றான். பிராட்டியை’ என்று முதலில் கூறினால் அவளது நிலைமை என்னாயிற்றென்று கூறுவனோ என்னும் சங்கையினால் இராமனுக்கு மிக்க துன்பம் உண்டாகக் கூடுமென்று கருதி கண்டனென்’ என்று முதலில் கூறினன் அநுமன். இதனை யடுத்து கற் பினுக்கு அணி என்று கூறியதன்காரணம், தானேவிளங்கும்; அவள் கற்பில் சிறவாதிருப்பின், அவளைக்கண்டது பயன் படாமை போகுமன்றோ? 'கற்பினுக்கு அணி என்பதன் கருத்து யாதோ எனின் பிராட்டி ஒருத்தி மிகவும் நெருக் கடியான நிலையிலும் மன உறுதியோடு கற்பு நிலையில் சிறிதும் வழுவாது இருப்பதனாலே பதிவிரதா தர்மம் உலகில் சிறந்து விளங்கிற்று என்பதை உணர்த்துதற்கு, 'கற்பினுக்கு அணியைக் கண்களால் கண்டேன்’ என்றது, 'அந்தச்சீதாப் பிராட்டி உன்னைப் பிரிந்து சிறைப்பட்டிருக் கின்ற அங்குக் கண்களினின்றும் நீரைத் தாரைத் தாரை யாகப் பெருக்கிக் கொண்டிருப்பதனால், அவள் கற்பினுக்கு அணியாவள் என்பதை உணர்ந்தேன்’ என்பதைத் தெரி வித்தற்கு, கற்புநிலை கெட்டிருப்பின் துயர்க்குக் காரணம் இல்லையாதலால் இவ்வாறு கூறினான் இராமது தன் என்று நயங் கண்டு மகிழலாம். - 65. சுந்தர. திருவடி தொழுத-56 66. டிெ, டிெ - 58