பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இங்ங்ணம் குறிப்பினால் கூறியதனை அநுமன் வகுத்துக் கூறும்போதுதான் கற்பின் விசுவ ரூபத்தை" நன்கு அறியமுடிகின்றது. அதுமன் கூறுவான்: உன்பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் தன்பெரும் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள் என்பெரும் தெய்வம் ஐயா! இன்னமும் கேட்டி என்பான்." (உரிமை-தகுதி, மருகி-மருமகள்; தனயை-மகள்; தகைமை - தன்மை தலைமை - சிறப்பு ; கேட்டி - கேட்பாயாக! இராமன், புருடோத்தமன்; அவனுக்கேற்ற உரிமைஉடைய வளானாள், தசரதன் மா மன்னன், அறந்திறம்பாதவன்; அவனுக்கேற்ற மருமகளானாள். சனகன் அரச முனிவன்; வைதிக ஆசார முறைமை சிறந்த பரம்பரையினன்; அவனுக்கு ஏற்ற மகளானாள். இந்த மூன்று நிலைக்கும். தலைமையுளதாதற்கு ஏற்ப சால்புடையவளாகத் திகழ், கின்றாள் என்று மாருதி உணர்ச்சியுடன் பேசுகின்றான். இன்னமும் கேட்டி என்பதைத் தொடர்ந்து, உன்குலம் உன்ன தாக்கி உயர்புகழ்க்கு ஒருத்தி யாய தன்குலம் தன்ன தாக்கித் தன்னை இத் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக்(கு) ஈந்து அவ் வானவர் குலத்தை வாழ்வித்து என்குலம் எனக்குத் தந்தாள் என்இனிச் செய்வது எம்மோய்!" 67. சுந்தர - திருவடிதொழுத - 59 68. சுந்தர - திருவடி தொழுத - 91