பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 75 (உன்னதாக்கி - உரியதாகச் செய்து; ஒருத்தி - ஒப்பற்: றவள்; தன்குலம் - தான் பிறந்த குலம்; தனிமை செய். தான் - தனித்திருக்கும்படிச் செய்தவன்; வன்குலம் - வவிய குலம் (அரக்கர்குலம்): கூற்று - யமன்; வானவர்குலம் -- தேவர்குலம்; என்குலம் - அநுமகுலம்; எம்மோய் - என் தாயாகிய பிராட்டி) என்று பேசுவான். உலகில் தன்குடிப்பிறப்பொன்றை மேம் படுத்துவதே ஒருவர்க்கு அரிது. ஆனால் பிராட்டியோ தனது கற்பு நிலை கலங்காத தன்மையினால் தனக்கே யன்றித் தன்குலத்திற்கும் பிறர் குலத்திற்கும் பெருைைமயத் தந்தாள் என்பதை இவ்வாறு பெற வைக்கின்றான். உன் குலம் உன்னதாக்கி : இதற்குமுன் இராமன் பிறந்த குலத்தை, சூரியகுலம், மநுகுலம், ககுத் தகுலம், இரகு குலம்’ என்று பெயரிட்டு வழங்கினர் முன்னோர். கற்பி னுக்கு அணியைப் பெற்றதனால், இனி இராமன் பேரிட்டு, 'இராமகுலம்’, ‘இராகவகுலம்’ (இரகுவமிசம்) என இவ் வாறு வழங்குமாறுச்செய்வித்தாள். தன்குலம்தன்னதாக்கி: இதற்கு முன் சீதை பிறந்த குலம் ஜனக குலம்’ என்று வழங்கப்பட்டு வந்தது; இனி ஜானகி குலம்’ என்று அக் குலத்தை இவள் பெயரிட்டுச் சொல்லும்படி செய்துவிட் டாள். 'என் குலம் எனக்குத் தந்தாள்'; என் குலம் - வான ரர் குலம். வானரர் குலத்துப் பிராணிகளையெல்லாம் அநுமன் என்று வழங்குமாறு செய்தாள் என்பது கருத்து: குரங்குகள் அநுமார்கள்’ என்று இப்போதும் வழங்கப்படு கின்றன அன்றோ? வன்குலம் - அரக்கர் குலம். கூற்றுக்கு ஈதல் - அழித்தல். இவற்றுள் அவரவர் பிறந்த குலம் அவரவர் குலமாக மாறியதையும், அரக்கர் குலம் கூற் றுக்கு ஈந்ததையும், இதனால் தேவர் குலத்தை வாழ்வித் ததையும் இங்குக் கண்டு மகிழ்கின்றோம்.