பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மேலும் இராமது தன் பேசுகின்றான்: விற்பெருந் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்: இற் பிறப்பு என்ப தொன்றும், இரும்பொறை என்ப தொன்றும், கற்பெனும் பெயர தொன்றும், களிநடம் புரியக் கண்டேன்." fதடந்தோள் - நீண்ட தோள்; வெற்பு-திரிகூடமலை; தவத் தள் கற்பொழுக்கமாகிய தவத்தை யுடையவள், நங்கைபிராட்டி; இல் பிறப்பு - உயர்ந்தகுடியில் பிறத்தல் என்ற குணம்; பொறை - பொறுமை, கற்பு - பதிவிரதா தர்மம்; களிதடம் - கூத்தாடுதல்; பிராட்டி ஒரு பெண்ணரசியாக உள்ளாள் என்பது மாத் திரமன்று; உயர்குடிப்பிறப்பு, பொறுமை, கற்புநிலை என் பவற்றின் சொரூபமாகவும் உள்ளாள் என்ற கருத்து இப் பாடலால் புலனாகின்றது. பிராட்டியைக் காணக் கருது மிடத்து இற் பிறப்பு முதலியனவே முந்திரிக்கொட்டை போல் முற்பட்டுத் தோன்றுகின்றன. பிராட்டியிடமுள்ள இற்பிறப்பு முதலிய குணங்களைத் தெரிவித்தல், இவ்வாறு கூறியதன் பயனாகின்றது. பிராட்டிக்குத்தவம்: இராமனை மணந்து கொள்ளுமாறு செய்த நோன்பு. பெருந்தவம் - காட்டில் பிரிந்த நிலையிலும் இராமனுடைய மனத்திலி ருக்க நேர்ந்தது. ஆகவே நற்பெருந்தவத்தள் என்றது: இராமனை மணந்து கானகத்திற்கு அவனுடன் போந்து பிரிந்த நிலையிலும் அவன் மனத்தால் நினைந்திருக்குமாறு உள்ளவள் என்பதைத் தெரிவித்ததற்கு. பிறிதொரு பாட வில், உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய! தவம் செய்த தவமாம் தையல்' என்று 69. சுந்தர. திருவடி தொழுத-92 70. சுந்தர: திருவடி தொழுத-64