பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 77 கூறுவான் அநுமன். பதிவிரதா தருமம் என்னும் தவம், தான் செய்ததொரு தவத்தின் பயனாக உள்ளவள்' என் பதால், தவம் செய்த தவமாம் தையல் என்று சுட்டிக் காட்டப்பெற்றது. இதனைக் கருத்தில் கொண்டே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், இதிகாச சிரேஷ்டமான ரீராமாயணத்தால் சிறை யிலிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது' என்று சிறப்பித்தார். நம்மாழ்வாரும் தனிச் சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள்'என்றுஅருளிச்செய்துள்ளார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகவுள்ள இன்னொரு பாடலில் வாயுகுமாரன் பேசுவது: - சோகத்தா ளாய நங்கை - கற்பினால் தொழுதற் கொத்த மாகத்தாள் தேவி மாரும் வான்சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள் அல்லள், ஈசன் மகுடத்தாள்: பதுமத் தாளும் ஆகத்தாள் அல்லள்: ւնfrԱ1&5r ஆயிரம் மோலி ஆனாள்' (சோகம் - துக்கம்; மாகத்தார் - பெருவானத்தில் உள். ளவர்; தொழுதல் - வணங்குதல்; வான் சிறப்பு - மிக்க பெருமை: பாகம் - இடப்புறம், பதுமத்தாள் - திருமகள்; ஆகம் - மார்பு; மோலி - திருமுடி) தக்கவன் ஒருவன் வாழத் தன்குலம் எல்லாம் வாழும்’ என்பது ஒரு முதுமொழி, ஒர் இனத்தாரில் ஒருவரது 71. பூர்வசன பூஷ்ணம்-5. (புருடோத்தமநாயுடு பதிப்பு-சென்னைப் பல்கலைக்கழகம்) 72. திருவாய் 4.8:5 73. சுந்தர. திருவடி தொழுத-67