பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நன்மை தீமைகளினால் அவ்வினத்தவர்க்கெல்லாம் பெருமை சிறுமைகள் உண்டாதல் இயல்பு. அது போலவே சீதாப்பிராட்டியின் கற்பு நிலையினால் மண்ணுலகத்து மாதரேயன்றி விண்ணுலகத்து மாதரும் சிறப்படைந்தனர் என்பதை இதனால் பெற வைக்கின்றார் கவிஞர். நங்கை கற்பினால் மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்புற்றார்: என்ற பகுதி இதனைத் தெரிவிக்கின்றது. பாகத்தாள் அல்லள் ஈசன் மகுடத்தாள்'; அம்மை அப்பர் மூர்த்தத் தில் சிவபெருமான் இடப்பாகத்தில் உள்ள அம்பிகை அப் பெருமானின் தலைமேல் இருக்கத்தக்க சிறப்படைகின் றாள். பதுமத்தாளும், ஆகத்தாள் அல்லள் மாயன்ஆயிரம் மோலி ஆனாள்: 'அகலகில்லேன் இறையும் என்று திரு மாலின் திருமார்பில் வீற்றிருக்கும் திருமகளும் அப்பெரு மானின் ஆயிரம் திருமுடிகளின்மேல் இருக்கத்தக்கவளா கின்றாள். கற்பில் சிறப்புற்ற பிராட்டியால் மாதர் குலத் திற்கே ஒரு மதிப்பு உண்டாகி விட்டது. சிறையிருந்தவள் ஏற்றத்தால் மாதர்குல ஏற்றம் சொல்லுகிறது’ என்கின் நான் கம்ப நாடன், பரம வைணவனாதலின். 4. மக்கட்பேறு; இல்வாழ்க்கையில் பெற வேண்டிய பல பேறுகளுள் ஒன்று நன்மக்களைப் பெறுதல். அறிவறிந்த மக்களைப் பெறுவதுபோல் மற்றப்பேறுகள் அவ்வளவு சிறப்புடையவை அல்ல என்பது வள்ளுவர் கருத்து. மக்கள் பேற்றில் ஆனா? பெண்ணா? என்பதை வள்ளுவர் வரை யறுத்துக் காட்டவில்லை. மனைக்கு விளக்கு மடவார்; மட வார்க்கு விளக்கு மக்கள்.இதுவே நல்ல குடும்பத்திற்கு நல்ல தோர்அணிகலம்! மனைக்கு விளக்கு மடவாள், மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர்" என்று கூறும் நான்மணிக்கடிகை. இங்கு தந்தை, தாய், மக்கள் இவர் கடமை இன்னதென எடுத்துக் காட்டப்பெறு 74. நான்மணிக்கடிகை - 101