பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 79. கின்றது. மக்களைக் கல்வியிற் சிறந்தபெரியோர் ஆக்குதல் தந்தைக்குக் கடன். சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் (புறம் - 312) என்பது பொன்முடியாரின் (பெண் பாற்புலவர்) வாக்கு. மக்கள் அறிவுடையவர்களாய் வளர்ந்து அறிஞர் கூட்டத்தில் முன் நிற்கும்படியாகச் செய்வதும் தந்தையின் கடமையாகும். தம் மக்களிடம் அறிவு நிறைந்தால் பெற்றோரும் மகிழலாம்: உலகத்தாரும் மகிழலாம். தம் மக்கள் அறிவுடையவர்களாக இருப்பது தம்மைவிட உலகத்தார்க்கு மிக நல்லதாகும். தந்தை என் நோற்றான் கொல்?’ (70) என்னும் தொடரால் 'தவம்புரிதல்' இல்வாழ்வார்க்கு உரியதே என்பது பெறப் படும். நன்மக்கட்பேறு தவத்தின் பயனாகவே ஏற்படும் தாயின் கடமை மக்களைக் குணத்திற் சிறந்த சான் றோர்களாக வளர்த்தல். ஈன்ற தாய் எப்போதும் மகிழும் இயல்புடையவள். குழந்தையைப் பெற்ற அன்றே அவள் மகிழ்ச்சி அடைகின்றாள்; முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்தே. தொந்தி சரியச் சுமந்து பெற்ற துன் பத்தையெல்லாம் ஒரு நொடியிலேயே மறக்கத்தக்க அவ் வளவு மகிழ்ச்சி அடைகின்றாள். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69) என்பது வள்ளுவம். தன் மகனுடைய நற்பண்புகளை அவள் எண்ணி உணர்ந்து மகிழ்ந்தாலும், அதே பண்பு களை மற்றவர்கள் உணர்ந்து மகிழ்ந்து போற்றுவார் களாயின், அவள் மகிழ்ச்சி - தனி மகிழ்ச்சி - பன்மடங்கு பெரிதாகும். மக்கள் பெற்றோர்க்கு நற்பெயர் ஈட்டிக்கொடுத்தல் அவர்களின் தலையாய கடன். இவன் நல்ல பண்புகள் நிறைந்தவன் - சான்றோன்’ என்று பிறர் பாராட்டுதலைக் கேட்டுத் தாயின் உள்ளம் குளிருமாறு மக்கள் நடந்து