பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கொள்ள வேண்டும். நல்லவன் என்று கேட்டுத்தாய் மகிழ் வது போல வல்லவன் என்று கேட்டுத் தந்தை மகிழ்வது இயல்பு. இக்குறிக்கோளை நிறைவேற்றுவதே மக்களின் கடமையாக அமைதல் வேண்டும். இதுவே நன்மக்கட் பேறு.” அன்புடைமை:அன்புடைமை என்பது, இல்வாழ்க்கையின் அடிப்படைப் பண்பைக் குறிப்பது. இஃது இரண்டாவது பகுதியில் தனித்து விளக்கப்பெறுகின்றது. அன்பு எல்லோ ரிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் உணர்வு. இதனை நச்சினார்க்கினியர், தன்னால் புரக்கப்படுவார் மேலுளதாகிய காதல்’ என்பர். தான் வேண்டப்பட்ட பொருளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி என்பர் இறையனார் களவியலாசிரியர். உலகில் அன்பு இலாத வர்களைக் காண்பது அருமை. கண்ணிர் விடாதவர்கள் உலகில் இருந்தால் அவர்களைத்தான் அன்பு இல்லாத வர்கள் என்று சொல்ல வேண்டும். மக்கள் வாழ்க்கையில் தம் துன்பத்திற்காக விடும் கண்ணிரும் உண்டு; பிறர் துன்பத்திற்காக விடும் கண்ணிரும் உண்டு. வாழ்க்கை பண்பட பண்பட பிறர் துன்பத்திற்காகக் கண்ணிர்விடுவதே மிகுதியாகின்றது. இந்தக் கண்ணிரில்தான் மக்கள் வாழ்க். கையின் சிறப்பியல்பு அமைந்துள்ளது. இல்லற நெறியில் ஒழுகுவோர் தாம் அன்பு செலுத்துகின்றவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடக் கண்டால், உடனே கலுழ்கின்ற, கண்ணிர் உள்ளத்தில் கொண்ட அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்துகின்றது. ஆகையால் அன்புக்குத் தடை ஏற்படுத்த முடியாது; அதனை அடைத்து வைக்கும். தாழும் இல்லை. அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும் (71) . என்று கூறுவர் வள்ளுவப் பெருந்தகை. இந்த அன்பு: பக்தியாக முறுகும் போதும் கண்ணிர் பெருகுவதைக்