பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓதம்

97

ஓர்தல்


ஓதம் = கடல், அண்டவாதம், வெள்ளம், கடல்அலை, ஈரம்
ஓதவனம் = கடல்
ஓதனம் = உணவு, சோறு
ஓதன்மை = பாடல், ஓதல் தன்மை
ஓதி = ஓணான், கல்வி, மலை, கற்றோன், ஞானம், செறிவு, பெண் மயிர், அறிவு, கூந்தல், அன்னம்
ஓதிமம் = அன்னம், மலை, கவரிமா, புளியமரம்
ஓது = பூனை
ஓதுவான் = மாணாக்கன், திருமுறைபாடுபவன், ஆசிரியன்
ஓதை = ஒசை, மதிலுள் மேடை, காற்று, மதில்
ஓத்து = வேதம், நூல் உட்பாகம், விதி, நூல்
ஓந்தி = ஓணான்
ஓப்புதல் = ஓட்டுதல், நீக்குதல்
ஓமம் = யாகம்
ஓமல் = ஊர்ப்பேச்சு
ஓமான் = ஓணான்
ஓமியம் = ஓமம்
ஓமை = பாலை நிலமரம், மாமரம்
ஓம் = பிரணவம், ஆம்
ஓம்படை = பாதுகாப்பு, பரிகாரம்
ஓம்பல் = பாதுகாத்தல், வளர்த்தல், தவிர்தல், நீக்குதல், விடுதல், உபசரித்தல், வராமல் காத்தல்
ஓய்தல் = ஒழிதல், தளர்தல், முடிதல், சோர்தல், தேய்தல், நீங்குதல், செலுத்தல்
ஓரகத்தி = கணவனின் சகோதரன் மனைவி
ஓரம் = பட்சபாதம், பக்கம்
ஓரல் = ஆராய்தல்
ஓராங்கு = ஒருசேர, இடைவிடாமல், ஒன்றுபோல
ஓராட்டு = தாலாட்டு
ஓராயம் = சேர்க்கை, சாய்வு, இணைப்பு
ஓரி = நரி, மயிர், ஆண்மயிர், நிறம், விலங்கின் படுக்கை, ஒரு வள்ளல், தேன், முதிர் நிறம்
ஓரிசு = தீர்மானம், சமாதானம்
ஓரை = இரண்டரை நாழிகை, முகூர்த்தம், இராசி, சித்திரான்னம், மகளிர் கூட்டம், மகளிர் விளையாட்டு, நேரம், விளையாட்டிடம்
ஓர்குண்டலன் = பலராமன்
ஓர்ச்சி = ஞானம், ஆராய்ச்சி, உணர்ச்சி
ஓர்தல் = ஆராய்தல், தெளிதல், அறிதல், நினைத்தல்

13