பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓர்த்தல்

98

ஒள


ஓர்த்தல் = நினைத்தல், தெரிந்தெடுத்தல், கேட்டல்
ஓர்ப்படி = ஓர் அகத்தி
ஓர்ப்பு = மனோதிடம், பொறுமை, ஆராய்ந்து தெளிதல் கருமம் முடிக்கும் துணிவு
ஓர்மை = துணிவு, ஒற்றுமை
ஓர்வு= அறிதல், ஆராய்வு
ஓலக்கம் = திருச்சமூகம், சபாமண்டபம்
ஓலம் = ஒலி, பாம்பு, அடைக்கலம், கடல்
ஓலாட்டு = தாலாட்டு
ஓலிடல் = ஓலமிடுதல், முழங்குதல், அலறுதல்
ஓலை = ஒருகாதணி, பனையோலை, ஓலை, சீட்டு,
ஓலைக்குடை, கடிதம்
ஓலைக்கணக்கர் = பள்ளியில் படிப்பவர்
ஓலைநாயகன் = சோழருடைய தலைமைக்காரிய நிர்வாகி
ஓலைப்பாசுரம் = ஓலைச்செய்தி
ஓலைப்புறம் = கட்டளை
ஓலைவாங்குதல் = இறத்தல்
ஓல் = ஓலம், தாலாட்டு, ஒலி
ஓவம் = சித்திரம், ஓவியம்
ஓவர் = ஓவியர், கம்மாளர், பாடற் கீழ்மக்கள்
ஓவாமை = ஒழியாமை
ஓவியகாயம் = புலி
ஓவியம் = சித்திரம், அழகு
ஓவியர் = சிற்பநூலோர்
ஓவுதல் = நீங்குதல், ஒழிதல், முடிதல், இடைவிடுதல், ஓய்தல்
ஓளி = வரிசை, யானைப்பந்தி, ஒழுங்கு
ஒள = பூமி, அனந்தம்
ஒளகம் = இடைப்பாட்டு
ஒளசித்தியம் = தகுதி
ஒளசீரம் = ஆசனம், கவரிமா மயிர், படுக்கை
ஒளடதம் = மருந்து
ஒளதசியம் = பால்
ஒளதாரியம் = தாராளமாகக் கொடுக்கும் மனப்பான்மை
ஒளபத்தியம் = புணர்ச்சி
ஒளபாசனம் = காலை மாலைகளில் இல்லறத்தார் வீட்டில் வளர்க்கும் அக்கினி
ஒளரசன் = தான் பெற்ற பிள்ளை
ஒளரப்பிரகம் = ஆட்டுமந்தை
ஒளவியம் = பொறாமை, தீவினை
ஒளவை = தாய், ஒளவை, தவப்பெண்
ஒளனம் = மிளகுரசம்