பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டில்

104

கணையம்


கட்டில் = சிங்காதனம், படுக்கை
கட்டு = பொய், மூட்டை, வரம்பு, காவல், வகுப்பு, தளை, ஆணை
கட்டுதல் = பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
கட்டுரை = உறுதிச்சொல், பொய், பொருளுள்ள சொல், புனைந்துரை, பழமொழி
கட்டுவாங்கம் = மழு, யோகியர் தண்டு
கட்டுவை = கட்டில்
கட்டுறவி = கட்டெறும்பு
கட்டடூண் = களவு செய்து உண்ணல்
கட்டூர் = பாசறை
கட்பு = களைபிடுங்கல்
கட்புலம் = பார்வை
கட்போர் = திருடு செய்பவர்
கணகன் = ஜோதிடன்
கணக்கன் = கணக்குப்பார்ப்பவன், புதன்
கணக்காயர் = உபாத்தியாயர், அறிஞர்
கணக்கு = எண், எழுத்து கருத்து, அளவு, சூழ்ச்சி தொகை, தன்மை, கணக்குக்குறிப்பு, கணக்கு நூல்
கணநாதன் = சிவன்
கணபங்கம் = க்ஷணந்தோறும் தோன்றி அழிதல்
கணப்பு = தீச்சட்டி
கணம் = கால நுட்டம், திரட்சி, வட்டம், சிறுமை, விண்மீன், கூட்டம், பிசாசம், அற்பம், சிவகணம்
கணவம் = அரசமரம்
கணவீரம் = அலரி
கணனம் = எண்ணுதல்
கணி = சோதிடன், வேங்கை மரம், மருத நிலம்
கணிகை = தாசி, முல்லை
கணிசம் = அளவு, மதிப்பு
கணிச்சி = மழு, அங்குசம், கோடரி, கத்தி
கணிதம் = சோதிடம், அளவு, எண்ணூல்
கணியான் = கூத்தாடி
கணு = மூங்கில், மூட்டு
கணுவை = ஒரு வாத்தியம்
கணேசன் = சிவன், விநாயகன்
கணை = அம்பு, அலகு, காம்பு, வளைதடி, திரட்சி, பூரநாள்
கணையம் = யானைக் கம்பம், ஒருவாத்தியம், குறுக்கு மரம், அம்பு, வளைதடி, கோட்டை, தண்டாயுதம்