பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119



கற்படை = கோட்டைத் திருட்டுவழி
கற்பம் = ஊ ழி க் கா ல ம், தேவலோகம், திருநீறு, பிரமன் ஆயுள், மந்திர சாத்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து, கற்பகம், வேதாங்கம்
கற்பனை = கட்டளை, நியமம், வருணனை, கல்வி, போதனை
கற்பு = கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம்
கற்புழை = மலைக்குகை
கற்றா= கன்றையுடைய பசு
கற்றானை = காவி வஸ்திரம்
கனகசபை = சிதம்பரம், பொன்னம்பலம்
கனகதண்டிகை = பொன் பல்லக்கு
கனகதம் = ஒட்டகம்
கனகம் = பொன்
கனகன் = இரண்யன்
கனகாசலம் = பொன் மலை, மகாமேரு
கனகி = ஊமத்தை
கனம் = கூட்டம், செறிவு, பொன், மேகம், நன்மதிப்பு, பெருமை, பருமை
கனருசி = மின்னல்
கனலி = சூரியன், பன்றி, நெருப்பு
கனலுதல் = எரிதல், காய்தல்
கனல் = கோபம், தீ
கனல்வு = கோபம்
கனவட்டம் = குதிரை, பாண்டியன் குதிரை
கனவு = கனா, தூக்கம், மயக்கம்
கனற்சி = கொதிப்பு
கனி = சுரங்கம், பழம், சாரம்
கனிட்டன் = சிறுவிரல், பின்னோன்
கனிட்டிகை = சிறுவிரல்
கனிதல் = உருகுதல், பெருங்கோபம் கொள்ளல், இரங்கல், இனித்தல்
கனிப்பு = இனிப்பு
கனிய = முற்ற
கனை = ஒலி, நெருக்கம், திரட்சி, மிகுதி
கன்மஷம்= அழுக்கு, பாவம்
கன்று = அற்பம். இளமரம், குட்டி, கைவளை
கன்றுதல் = இரங்குதல், கோபித்தல், நைதல், வாடுதல், நெருங்குதல், முதிர்தல்
கன்னகடுரம் = காதுக்கு அருவருப்பாய் இருத்தல்
கன்னபரம்பரை = காதால் கேட்டுவரும் வழக்கம்
கன்னப்பூ = காதணி