பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125



காலாடல்

125

காவிதிப்பட்டம்

காலாடல்=முயலல், செல்வம் மிக்கிருத்தல்
காலாந்தகன் = சிவன்
காலாந்தரம்=வேறுபட்ட காலம்
காலாயுதம் = கோழி
காலாரி = சிவன்
காலாவதி = காலவரையறை
காலாழ் = சேறு
காலாறு = வண்டு
காலி = பசுக்கூட்டம், பசு
காலிலி=அருணன், காற்று, பாம்பு, முடவன்
காலுதல் = வீசுதல், பொழிதல், சிந்துதல், கக்குதல் , உமிழ்தல்
காலேகம் = முத்து, கலவைச் சாந்து
காலேயம் = பசுக்கூட்டம்> புல் உண்ணும் சீவன்கள்
காலை = பகல், சூரியன;, முறை, சமயம்
கால் = கால், காற்று, அளவு, முயற்சி, கிரணம், இடம், காலம், காலன், கால் பங்கு, தூண், வண்டி, பிறப்பிடம், உருளை, தேர்ச்சக்கரம், துறை, நடை, பொழுது, மகன், வலிமை, இயமன், முனை, காம்பு, முளை, வாய்க்கால், வம்சம், கைப்பிடி

}

கால்கோள் = தொடக்கம்
கால்சீத்தல் = அகற்றல், தூய்மை செய்தல்
கால்செய்வட்டம் = விசிறி
கால்நடை = ஆடு மாடுகள்
கால்மாடு = கால்பக்கம்
கால்யாத்தல் = நெருங்குதல், பாத்தல், தேக்குதல், மறைத்தல்
கால்வழி = சந்ததி
காவணம் = பந்தல், மண்டபம், சோலை
காவதம்= பத்துக்கல் தூரம்
காவந்து = காவல், எசமான்
காவலன் = அரசன், காவல்காரன்
காவல் = மதில், சிறைச்சாலை, பரண், கவசம், காத்தல், வேலி
காவல் கடவுள் = திருமால்
காவல்பெண்டிர் = செவிலித்தாய்
காவன் = சிலந்தி
காவாலி = வீண் பேச்சுக்காரன்
காவி = செங்கழுநீர் மலர், காவிக்கல், செம்மண்
காவிதிப்பட்டம் = வேளாளர்கட்கு அரசனால் கொடுக்கப்படும் பட்டம்