பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அநவரதம்

10

அந்தம்


அநவரதம் = எப்பொழுதும்
அநாமயன் = கடவுள்
அநாவிருட்டி = மழையில்லாமை
அநிகம் = சேனை
அநிட்டம் = துன்பம், தடை
அநிருதம் = பொய்
அநிலம் = காற்று
அநிலன் = வாயுபகவான்
அநீகினி = சேனை
அநுகமனம் = உடன் கட்டை ஏறுதல்
அநுகம்பம் = இரக்கம்
அநுகரணம் = ஒன்றுபோலச் செய்தல், ஒப்பாதல்
அநுசந்தாநம் = இடையறாது நினைத்தல்
அநுசந்தித்தல் = இடைவிடாது ஓதுதல்
அநுசன் = தம்பி
அநுசாசனம் = கட்டளை, உபதேசம்
அநுசிதம் = தக்க தல்லாதது, பொய்
அநுஞ்சை = கட்டளை
அநுட்டானம் = ஒழுக்கம், தவம், வழக்கம்
அநுதாத்தம் = படுத்தல் ஓசை
அநுதாபம் = பின் இரங்குதல்
அநுநாசிகம் = மெல்லெழுத்து
அநுபந்தம் = பின் சேர்க்கப்படுவது
அநுபூதி = தான் கண்டறிந்ததும் பிறருக்குச் சொல்ல இயலாததுமான அறிவு
அநுமானம் = சந்தேகம், கருதல் அளவை
அநுயோகம் = கேள்வி
அநுரதி = அன்பு
அநுராகம் = மிக்க பிரியம்
அநுலோமன் = உயர்குலத்தவனுக்கும் இழிகுலத்தவளுக்கும் பிறந்தபிள்ளை
அநுவாதம் = முன்னர்க் கூறியதைப் பின்னரும் எடுத்து ஒதல்
அந்தகன் = யமன், குருடன்
அந்தகாரம் = இருள்
அந்தக்கரணம் = உட் கருவி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
அந்தணர் = முனிவர், அழகிய குரு, தட்பத்தினையுடையவர்
அந்தம் = அழகு, குருடு, முடிவு, வேதாந்தம், கத்தூரி, இரகஸியம்