பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


கோடணை = பேரொலி, அலங்காரம், கொடுமை, வாத்தியம்
கோடம் = ஒலி, எல்லை, யாழ்வாசித்தல், வெண்கலம்
கோடரம் = குரங்கு, சோலை,பாக்குமரம், குதிரை, மரப்பொந்து, தேரின்மொட்டு, எட்டி மரம், மரக்கொம்பு
கோடரி = மரம் வெட்டும்கருவி
கோடல் = காந்தள், வளைதல்
கோடவதி = ஒருவகைவீணை
கோடாய் = செவிலித்தாய்
கோடி = புதுச்சீலை, வளைவு,நுனி, எல்லை, முனை, மூலை, புதுமை, நூறுலட்சம்
கோடிகம் = பூந்தட்டு, சிலை,கெண்டிகை
கோடித்தல் = அலங்கரித்தல்
கோடிப்பாலை = ஒருபண்
கோடியர்=நடிகர், பல்லக்குச்சுமப்பவர்
கோடிரம் = சடை, இந்திரன்வில், கிரீடம்
கோடு = மரக்கிளை, வளைவு,பிறை, கீறல், சங்கு, நீர்க்கரை, மேடு, மலை யுச்சி, மலை, கரை, வரம்பு, முனை, வீணைத்தண்டு,கொடுமை,
பக்கம், குளம்
20
கோடுதல் = தவறிநடத்தல், கொள்ளுதல், வளைதல்
கோடை = காற்று, வெண்காந்தள், வேனிற்காலம், குதிரை
கோடைக்காற்று = மேல் காற்று, முதிர் வேனிற் பருவக்காற்று
கோட்டகம் = குளம், நீர்நிலை, கரை
கோட்டம் = கோயில், பொறாமை, கொம்பு, மாறுபாடு, அறை, ஆரவாரம், பசுக்கொட்டில், குராமரம், நாடு, கோணல், வளைவு, சிறை,
மருத நிலத்தூர், நியாயம் தவறல், பகைமை வணக்கம், வாசனைப்பண்டம்.
கோட்டாலை = துன்பம்
கோட்டி = சபை, துன்பம்,பைத்தியம், பேச்சு, கோபுரவாயில்
கோட்டினம் = எருமைக்கூட்டம்
கோட்டு = நெற்கூடு
கோட்டுதல் = வளைத்தல், கட்டுதல், சித்திரம் எழுதுதல்
கோட்டுப்பூ = கிளைப்பூ
கோட்டுமா = பன்றி, யானை, எருமைக்கடா
கோட்டுமீன் = சுறா
கோட்டுர்தி = தந்தப்பல்லக்கு*