பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154


கோட்டை = அரண், நெல், வைக்கோற்போர், இருபத்தோரு மரக்கால் கொண்ட அளவைக்கருவி கோட்பறை = நெய்தற்பறை, செய்தி அறிவிக்கும்பறை கோட்பாடு = கொள்கை கோட்பு = கொள்ளுதல், வலிமை கோணங்கி = திருமால்- கூத்து கோணம் = குதிரை, வளைவு, சிறுதெரு, மூலை, மூக்கு, வளைந்தவாள், யானையடக்கும் அங்குசம் கோணாய் = நரி, ஓநாய், நாய் கோணி = பூமி, தானியப்பை கோணை = அழிவின்மை கோண் = வஞ்சனை, மாறுபாடு, கொடுங்கோன்மை, வளைவு கோண்மா = யானை, புலி, சிங்கம் கோதண்டபாணி = இராமன் கோதண்டம் = வில் கோதம் =குரோதம், கோபம், வெறுப்பு கோதனம் = பசுக்கன்று, பசுக்கூட்டம் கோதா = உடும்பு கோதாட்டு = குற்றமுள்ள விளையாட்டு, சூதாட்டம், குற்றம்தீர்த்தல், பாராட்டு கோதாட்டுதல் = சீராட்டுதல் கோது = குற்றம், சக்கை கோதை = மலர்மாலை, சேரன், ஒழுங்கு, கூந்தல், காற்று, ஸ்ரீ ஆண்டாள், பெண், பூதம் கோத்திரம் = வமிசம், குலம், பூமி, மலை, வழி, காடு, வயல் கோத்திரை = மலை, பூமி கோநகர் = கோயில் கோபம் = தம்பலப்பூச்சி, சினம் கோபன் = இடையன், சிவன் கோபாலன் = இடையன், கண்ணன் கோபிதாரம் = குராமரம் கோப்பியம் = இரகசியம், கண்ணியம் கோப்பு = பெருமை, ஒழுங்கு,சீர், சுமை, கோத்தல், அமைப்பு கோப்பெண்டு = அரசன் மனைவி கோமகள் = தலைவி, அரசமகள் கோமடந்தை = இராசலட்சுமி கோமயம் = பசுச்சாணம் கோமளம்= இளமை, அழகு, மென்மை, பசு கோமாட்டி = தலைவி கோமான் = அரசன், தலைவன், பன்றி