பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155


கோம்பல் = தணியாக்கோபம் கோம்பி = ஒந்தி கோம்பு = கோபக்குறிப்பு கோம்பை = தேங்காய் ஓடு, அறிவிலி, குரும்பை கோயில் = சிதம்பரம், அரசன் வீடு, ஸ்ரீரங்கம், விபூதிப்பை, தேவாலயம் கோய் = பரணி, குகை, கள் முகந்கெடுக்கும் பாத்திரம் கோரகம் = இளம்பூ வரும்பு கோரகை = பிச்சைப்பாத்திரம், அரும்பு, அகப்பை, குயில் கோரணி = கோளாறு, ஆசியம் கோரம் = அச்சம், கொடுமை, குதிரை, வட்டில், வளைவு, சோழன் குதிரை, விகாரம் கோரம்பர் = கழைக்கூத்தர் கோரன் = சிவன் கோரி = பார்வதி கோலம் = அழகு, குரங்கு, அலங்கரிப்பு, விளையாட்டு, வேடம், இலந்தைக்கனி, நீரோட்டம், பன்றி, பாக்கு, மாக்கோலம், கருங்குவளை, வளைவு, கழுநீர் , தொய்யில் கோலாகலம் = பேர்ஒலி கோலி = இலந்தை கோலிகன் = நெய்வோன் கோலுதல் = வளைதல், வகுத்தல், அமைத்தல் கோல் = அம்பு, குதிரைச் சம்மட்டி, தண்டு, ஊன்றுகோல், தடி, தராசுகோல், அளவுகோல், செங்கோல், யாழ்நரம்பு, எழுதுகோல், திரட்சி கோல்கோடுதல் = அரசமுறை தவறுதல் கோல்வளை = திரண்டவளை, பெண் கோவர் = இடையர், அரசர் கோவிதன் = அறிஞன் கோவிலங்கு = சிங்கம் கோவில் = அரசர் மாளிகை, ஸ்ரீரங்கம், கோயில், சிதம்பரம் கோழம்பம் = குழப்பம் கோழி = உறையூர், விட்டில் கோழிக்கூடு = கள்ளிக்கோட்டை கோழிக்கொடியோன் = ஐயனார், முருகன் கோழிவேந்தன் = சோழன் கோழ் = கொழுத்த, செழிப்பான கோளகம் = மிளகு, மண்டலிப் பாம்பு, பட்டுச்சீலை, திப்பிலி கோளகை = அண்டமுகடு, உருண்டை வட்டம், பூண் கோளம் = வட்டம், சிவலிங்கம் கோளரி = சிங்கம்