பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கமர்

159

சச்சரி



சங்கமர் = வீரசைவர், லிங்கதாரிகள்
சங்கம் = கூட்டம், அழகு, ஒரு பேர் எண், லட்சங்கோடி, கைவளை, சங்கு, மதுரைத் தமிழ்ச் சங்கம், கணைக்கால், சபை, புலவர், நெற்றி
சங்கயம் = சந்தேகம்
சங்கரம் = கலப்பு
சங்கரன் = இன்பம் தரும்
சிவபெருமான்
சங்கரி = பார்வதி
சங்கருடணம் = இழுத்தல்
சங்கலார் = பகைவர்
சங்கற்பம் = விருப்பம், நியமம், எண்ணம், துணிவு, மனோ நிச்சயம், கொள்கை
சங்கனனம் = நரம்பு
சங்காசம் = உவமை
சங்காட்டம் = சேர்க்கை
சங்காதம் = கூட்டம்
சங்காத்தம் = இணக்கம், சினேகம், வசிக்கை
சங்காளர் = காமுகர்
சங்கிதை = சரித்திரம், பிரிவு
சங்கித்தல் = சந்தேகப்படல், அஞ்சுதல், கனப்படுத்துதல்
சங்கியை = எண்ணிக்கை
சங்கிரகணம் = ஏற்றுக் கொள்ளல்
சங்கிரகம் = சுருக்கம்
சங்கிராந்தி = பொங்கற் பண்டிகை, உத்தராயண நாள்
சங்கிராமம் = போர்
சங்கிரணம் = கலப்பு
சங்கீர்த்தனம் = புகழ்ச்சி
சங்கு = கைவளை, தூண், கோழி, ஆணி, ஆப்பு, ஒரு பேரெண்
சங்கேதம் = ஏற்பாடு, குழு உக்குறி, குறிப்பு, ஒற்றுமை, உணர்ச்சி,
நியமம், உடன்பாடு
சங்கேயம் = சுருக்கம்
சங்கை = அச்சம், கனம், சந்தேகம், கணைக்கால், எண்ணம், எண்
சங்கோசம் = அடக்கம், மஞ்சள், கூச்சம், சுருங்கல்
சசம் = முயல்
சசி = இந்திராணி, கற்பூரம், பயிர், சந்திரன், கடல், மழை
சசிசேகரன் = சிவன்
சசிதரன் = சிவன்
சசிமணாளன் = இந்திரன்
சசியம் = பயிர், மரங்களின் வருவாய்
சசிவன் = மந்திரி
சச்சரி = ஒருவகை வாத்தியம்