பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொடி233

தொலைத்தல்


  
தொடி = ஒருபலம், கங்கணம், தவளை, பூண்
தொடிமகள் = விறலி
தொடு = தோட்டம், நிலம், வஞ்சம்
தொடுகை = தோண்டுதல்
தொடுதல் = தொடங்கல், தோண்டல், நினைத்தல், தரித்தல், பிழிதல்,ஆணையிடுதல், பிடித்தல், இடுதல், கட்டல், தீண்டுதல் தொடுதோல் = செருப்பு
தொடுப்பு = கலப்பை, பழக்கம், புறங்கூறல், சேர்க்கை
தொடை = அம்பு, மாலை, நாணி, கொத்து, நரம்பு, யாழ் நரம்பு, கேள்வி, கட்டு, சந்து, பாட்டு, தாறு
தொடையல் = தேன் கூடு, தொடர்ச்சி, தோளணி, மாலை கட்டுதல் தொட்டல் = தோண்டுதல்
தொட்டிமை = ஒற்றுமை, அழகு
தொண்டகம் = ஆ கோட்பறை, குறிஞ்சிப்பறை
தொண்டலம் = யானைத் துதிக்கை
தொண்டி = நெல்லால் செய்யப்பட்ட கள், சோழநாட்டு நகரங்களில் ஒன்று
தொண்டியோர் = சோழர் குலத்தவர்
30
தொண்டு = ஒன்பது, பழமை, அடிமை, வழிபாடு
தொண்டை = கொவ்வைக்கனி, மிடறு, யானைத் துதிக்கை, பெருங்குரல்
தொத்து = அடிமை, திரள், பற்று, சார்பு, பூங்கொத்து
தொந்தம் = நெடுங்கோபம், இரட்டித்தது, பழமை, தொடர்பு, பிணைப்பு, சம்பந்தம்
தொந்தித்தல் = பற்றுதல், கலத்தல்
தொப்பாரம் = மூட்டை
தொம்பர் = கழைக்கூத்தாடிகள்
தொய் = குற்றம்
தொய்தல் = இளைத்தல், தளர்தல், உழுதல்
தொய்யகம் = தலைப்பாளை
தொய்யல் = இளைத்தல், அகமகிழ்ச்சி, இன்பம், உழவு, துன்பம், சேறு
தொய்யில் = எழுதும்குழம்பு, மார்பில் சாந்தினால் எழுதப்படும் கோலம், அழகு, உழுநிலம்
தொலித்தல் = உரித்தல், உழி போகக் குற்றுதல்
தொலை = ஒப்பு, அழிவு, தூரம்
தொலைத்தல் = அழித்தல், கொல்லல்