பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவநிபன்

21

அவிவேகம்


அவநிபன் = அரசன்
அவனிபாலன் = அரசன்
அவநுதி = உண்மையை மறுத்துப் பிறிதின்றினைக் கூறுவது
அவநெறி = பாவ வழி
அவப்பொழுது = வீண் பொழுது
அவம் = வீண், தீமை
அவரோகணம் = இறங்குதல், விழுது, திருப்பிச்சொல்லுதல்
அவலம் = அழுகை, கிலேசம், சோர்வு, வலியின்மை, வறுமை, குற்றம, வீண்
அவலம்பம் = ஊன்றுகோல், பற்றுக்கோடு
அவலம்பித்தல் = சார்ந்து நிற்றல்
அவலித்தல் = மனம் வருந்துதல், அழுதல்
அவலை = காடு, பாழ் நிலம்
அவல் = விளைநிலம், குளம், சிறு பள்ளம்,சிற்றுணவு
அவனி = உலகம்
அவா = ஆசை
அவாசி = தெற்கு
அவாய் நிலை = வேண்டி நிற்கும் நிலை, பொருள் நிறைவுறாமல் எஞ்சி நிற்பது
அவி = ஆடு, தேவருணவு, ஓம நெய், சோறு
அவிகற்பம் = சந்தேகம் இல்லாமை
அவிகாரி = கடவுள்
அவிசு = உப்பின்றிச் சமைத்த பச்சரிசி சோறு, தேவருணவு, நீர், வெண்ணெய்
அவிச்சை = அறியாமை, மன மயக்கு, வெறுப்பு, மாயை
அவிஞ்சை = அஞ்ஞானம்
அவிதா = உதவி செய்யும் பொருட்டுக் கூறப்படும் அபயச் சொல்
அவித்தை = அஞ்ஞானம், ஆணவமலம், மாயை
அவிநாசி = அழியாமை, அழியாதவன், ஒரு சிவதலம்
அவிப்பலி = வீரர்கள் தங்களுயிரை பலியாகக் கொடுத்தல், தேவருணவு
அவிமுக்தம் = காசி
அவியல் = புழுக்கம், உஷ்ணம்
அவிர்தல் = ஒளி செய்தல், பாடம் செய்தல், விளங்குதல்
அவிவேகம் = அறிவு இன்மை