பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நகுலம்

237

நடைக்கலம்




நகுலம் = கிாி
நகுலன் = சிவன், பாண்டவாில் ஒருவன்
நகேசன் = இமயமலை
நகை = ஆபரணம், ஒளி, இகழ்ச்சி, மகிழ்ச்சி, பல், சிாிப்பு, பூவரும்பு
நகைத்தல் = நிந்தித்தல், சிாித்தல்
நக்கரம் = முதலை, தேள்
நக்கல் = தீண்டல், சிாித்தல்
நக்கன் = சிவன், நிா்வாணி
நக்காித்தல் = நகா்ந்துசெல்லுதல், தவழ்தல்
நக்கினம் = நிா்வாணம்
நக்கிராயம் = முதலை
நங்குதல் = பழித்தல்
நங்கூரம் = கப்பல் ஆடாது அசையாதிருக்கச் செய்யும் கருவி
நங்கை = மாதா்களுள் சிறந்தவள்
நசித்தல் = அழித்தல், சாதல்
நசியம் = மூக்கில் இடும் பாெடி
நசை = அன்பு, ஆசை, ஈரம், குற்றம், விருப்பம்
நசை = விரும்புதல்
நசையுநர் = விரும்புவாோ்
நசைவு = ஈரம்
நச்சு = ஆசை, சிறுமை, விடம், தாெந்தரை
நச்சுக்குழல் = தூரதிருஷ்டிக் கண்ணாடிக் குழல்
நச்சுதல் = விரும்புதல்
நஞ்சம் = விஷம்
நஞ்சுணி = சிவன்
நடத்தை = ஒழுக்கம்
நடமாடி = நடராஜன்
நடம் = கூத்து
நடலம் = செருக்கு, பாசாங்கு, வீண்செலவு
நடலை = பாெய், வஞ்சனை, வருத்தல், துவளுதல்
நடவை = வழி நடக்குமிடம், உபாயம்
நடாத்துதல் = நடத்துதல்
நடி = கூத்தி, நடனமாது
நடிப்பு = பாசாங்கு, கூத்து
நடு = நதி, இடுப்பு, நடுநிலை
நடுநிலை = நீதி
நடுவன் = நமன்
நடுவாந்தரம் = இடை
நடுவின்மை = நீதிக்கேடு
நடுவுநிலைமை = நீதி
நடை = ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
நடைக்கலம் = மரக்கலம்