பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாகராசன்

243

நாண்மின்


  
நாகராசன் = ஆதிசேடன்
நாகரிகம் = சாதுரியம், தாட்சண்யம், மரியாதை, நகர சம்பந்தமுடையது
நாகரிகர் = காமுகர், நகரத்தார், சதுரர்
நாகர் = தேவர், நாகலோகவாசிகள்
நாகலோகம் = தேவலோகம், கீழ்லோகம்
நாகல் = நாவல்
நாகவல்லி = வெற்றிலைக் கொடி
நாகாபரணன் = பாம்பாபரணனான சிவன்
நாகு = இளமை, சங்கு, பசுக்கன்று, நத்தை, புற்று
நாகை = நாகபட்டினம்
நாக்குறுதி = சொல்வன்மை
நாங்கூழ் = பூநாகம், நாக்குப்பூச்சி, மண் புழு
நாசாக்கிரம் = நாசி நுனி
நாசி = மேல் வாயிற்படி, மூக்கு
நாசிகாக்கிரம் = மூக்குத்துாள்
நாசிகாசூரணம் = மூக்குப்பொடி
நாசிதாரு = மேல்வாயிற்படி
நாசித்துவாரம் = மூக்குத்துளை
நாசுவன் = அம்பட்டன்
நாஞ்சில் = கலப்பை, மதிலுறுப்பு
நாடகக்கணிகை = நாடகசாலைப் பெண்
நாடி = தாது, நரம்பு, நாடி, இரத்தக்குழாய், நாழிகை, மாளிகை, மேலுறுப்பு
நாடிகேளம் = தேங்காய்
நாடுதல் = விரும்புதல், தேடுதல், அளத்தல், தெரிதல்
நாட்காலம் = விடியற்காலம், ஏற்ற பருவம்
நாட்டமிலி = குருடன.
நாட்டம் = கண், வாள், விருப்பம், சோதிட நூல், அழகு, ஆராய்தல், நோக்கம், சஞ்சாரம்
நாட்டாண்மை = ஊர் அதிகாரம்
நாட்பூ = புதுமலர்
நாணயம் = உண்மை, காசு, உயர்வு, நாணயம், நேர்மை
நாணி = வில்நாண்
நாணுதல் = அடங்குதல், வெட்கப்படுதல்
நாண் = கயிறு, வில் நாண்
நாண்மகிழிருக்கை = திருவோலக்கம்
நாண்மலர் = அன்றலர்ந்தபூ
நாண்மீன் = நட்சத்திரம்