பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவிழகம்

22

அழிதல்


அவிழகம் = மலர்ந்த பூ
அவிழ் = சோறு
அவுணன் = அசுரன்
அவுதா = யானைப் பீடம்
அவை = சனம், கூட்டம், புலவர்
அவையடக்கம் = சபையோர் முன் தன்னை தாழ்மையாகக் கூறிக்கொள்ளுதல், அவையை வழிபட்டு அதனை தன் மொழி வன்மையால் அடக்குதல்
அவையம் = திரள், அவைக்களம்
அவையல்கிளவி = சபையில் கூறத்தகாத மொழி
அவ் = அவை
அவ்வது = அவ்வாறு
அவ்வயின் = அவ்விடம்
அவ்வரி = அழகியவரி
அவ்வாய் = அழகிய இடம்
அவ்வித்தல் = பொறாமை கொள்ளுதல்
அவ்வியம் = பொறாமை, தேவர்க்கிடும் பலி
அவ்வை = தாய், தவப்பெண், ஔவையார்
அழம் = பிணம்
அழலவவன் = சூரியன், அங்காரகன்
அழலுதல் = கோபித்தல், எரிதல்
அலேந்தி = சிவன்
அழலை = களைப்பு
அழலோம்பல் = அக்கினி காரியம் செய்தல்
அழலோன் = சூரியன்
அழல் = தீ, விடம், கார்த்திகை, அழுதல், ஒளி
அழல்தல் = எரிதல், விளங்குதல், கோபித்தல், பொறாமை கொள்ளுதல்
அழல்வண்ணன் = சிவன்
அழற்காய் = மிளகு
அழற்குட்டம் = கார்த்திகை நாள்
அழற்சி = கோபம், எரிதல்
அழனம் = நெருப்பு, வெப்பம்
அழன் - பிணம்
அழால் = அழுதல்
அழி = இரத்தம், வைக்கோல், அழிவு
அழிதகந் = வன்கண்ணன், அழிக்கப் படத்தக்கவன்
அழிதகை = தகுதிக் கேடு
அழிதலை = தலை யோடு
அழிதல் = ஒழிதல், சாதல், கலங்குதல், இரங்குதல், பெருகுதல், கெடுதல், இகழ்தல், வருந்தல்