பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ




  
நீ = நீங்குதல
நீகாமன் = மீகாமன்
நீகாரம் = பனி, பனிக்காலம், அவமதிப்பு
நீகான் = மீகாமன்
நீக்குதல் = கொல்லல், அகற்றுதல், கழித்தல், பிரித்தல்
நீசம் = தாழ்வு, இழிவு
நீடம் = பறவைக்கூடு
நீடாணம் = கறி
நீடுதல் = நீளுதல், பரத்தல், தாமதித்தல், கெடுதல், நிலைத்தல்
நீட்டல் = ஈதல், மயிர்வளர்த்தல்
நீணெறி = நீண்டவழி
நீண்டவன் = விஷ்ணு
நீதம் = நீதி, தகுதி
நீதி = முறைமை, ஒழுக்கம், தருமம், மெய்
நீதிநெறி = சன்மார்க்கம்
நீதிபரன் = அரசன், நீதிமான்
நீத்தம் = வெள்ளம், ஆழம், கடல், மிகுதி
நீத்தல் = பிரிதல், துறத்தல், தள்ளுதல், வெறுத்தல்
நீத்தார் = முனிவர்
நீத்து = நீந்தக்கூடிய ஆழம், வெள்ளம்
நீபம் = கடம்பு, உத்திரட்டாதி, காரணம்
நீப்பு = பிரிவு, துறவு
நீயம் = ஒளி
நீயான் = மாலுமி
நீரகம் = தாமரை, கடல் சூழ்ந்த இடம், பூமி
நீரணி = நீர்விளையாட்டுக் கோலம்
நீரதம் = மேகம், நீர் இல்லாமை
நீரம் = நீர்
நீரரண் = அகழ்
நீரரமகளிர் = நீரில் வாழும் தெய்வப்பெண்கள்
நீராகாரம் = பானகம், சோற்றுநீர்
நீரஞ்சனம் = ஆரத்தி, மஞசள் கலந்த நீர்
நீராவி = புகை, கேணி
நீராளம் = நீரின் தன்மை, நீர்மிகுதி
நீர் = குணம், தன்மை, ஒளி, நீங்கள், கடல், முறை
நீர்க்கடன் = திலதர்ப்பணம்
நீர்த்தூம்பு = மதகு
நீர்நிலை = குளம், மடு
நீர்பிரிதல் = கோபித்தல்
நீர்ப்பாடு = நீர் இழிவு நோய்
நீர்மை = குணம், ஒளி, நீரின் தன்மை, வள்ளல்
நீர்வாரம் = குளநெல்
நீலாஞ்சனம் = கறுப்புக்கல்
நீலகண்டம் = மயில்