பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகடி

260

பக்கறை


  
பகடி = பரிகாசம், விகடம், கூத்து
பகடு = எருது, பெருமை, வலிமை, அகலம், மரக்கலம், ஆண் யானை
பகண்டை = விகடப்பாடல்
பகம் = அழகு, பெண்குறி, அவா இன்மை, மோட்சம், ஐசுவரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள்
பகரம் = அழகு, பிரதி
பகர்தல் = சொல்லுதல் விற்றல், ஒளிர்தல், கொடுத்தல்
பகலவன் = சூரியன்
பகல் = சூரியன்
பகல் = ஒளி, சூரியன், தினம், நடுநிலை, உச்சிவேளை, பிரிவு, நடு, நுகத்தின் நடு ஆணி, பகுத்தல், முகூர்த்தம், நாள்
பகவதி = பார்வதி, காளி
பகவன் = கடவுள், குரு, சிவன், முனிவன்
பகவான் = கடவுள், சூரியன்
பகவு = பிளவு, பிரிவு, பங்கு, துண்டு
பகழி= அம்பு, அம்பின் இறகு
பகன்றை = கிலுகிலுப்பை
பகிரண்டம் = அண்டத்தின்வெளி
பகிர் = துண்டம், வெளிப்புறம், பங்கு
பகினி = உடன் பிறந்தாள்
பகீரதி = கங்கை
பகு = அதிகமான்
பகுதி = குடிமக்கள் செலுத்தும் வரி, இயல்பு, பங்கு
பகுத்தறிவு = நன்மை தீமைகளைப்பிரித்தறியும் அறிவு
பகுவசனம் = பன்மை
பகுவாய் = பிளவுபட்டவாய்
பகுளம் = கிருஷ்ணபட்சம்
பக்கடுத்தல் = நொறுங்குதல்
பக்கணம் = ஊர், வேடர்தெரு
பக்கத்தார் = மந்திரிகள், இனத்தவர்
பக்கம் = அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
பக்கரை = சேணம்
பக்கறை = துணியுறை, குழப்பம்