பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பஞ்சாக்கரம்

263

படிகம்


  
பஞ்சாக்கரம் = ஐந்தெழுத்தால் ஆன மந்திரம், நமசிவாய
பஞ்சாக்கினி = நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்ட தீயுடன் மேல், சூரியனாகிய தீயும் சேர்ந்த ஐந்து அக்கினிகள்
பஞ்சாங்கம் = திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்
பஞ்சாமிர்தம் = பால், தயிர், நெய், தேன், சர்க்கரை
பஞ்சாயத்து = ஐவர் கூடிய நியாய சபை
பஞ்சாயுதம் = சங்கு, சக்கரம், கதை, வாள், வில்
பஞ்சாய் = கோரை
பஞ்சானனம் = சிங்கம்
பஞ்சி = வெள்ளிய ஆடை, செம்பஞ்சுக்குழம்பு, நார்
பஞ்சுரம் = பாலைப்பண்
பஞ்சை = தரித்திரன், பிச்சைக்காரன், பலஈனன்
பஞ்ஞிலம் = மக்கள் தொகுதி
படகம் = மத்தளம், பாண்டம், பரண், கலகம், பறை
படங்கள் = கூடாரம், மேற்கட்டி
படங்கு = கூடாரம், ஆடை, பெருங்கொடி, மேற்கட்டி, இடுதிரை
படப்பு = வைக்கோற்போர், கொல்லை
படப்பை = தோட்டம், பக்கம், ஊர்ப்புறம், கொல்லை
படமரம் = நெய்வார்கருவி
படம் = சீலை, காற்றாடி, திரைச்சீலை, ஆடை, சட்டை, கொடி
படர் = துன்பம், நினைவு, வருத்தம், ஏவல் செய்பவர், தூதர்
படர்ச்சி = நடை, பரவுதல்
படர்தல் = வருந்துதல், நினைத்தல், செல்லுதல்
படலம் = மூடி, கண்படலம், கூடு, இலக்கியங்களில் வரும் ஒரு சிறு
பாகுபாடு, கூட்டம், பரப்பு, விதானம், அடுக்கு
படலிகை = பூந்தட்டு, வட்டம், பூம்பெட்டி, கண்ணோய்
படலை = இலை மாலை, பரந்த வடிவு, தழை, கூட்டம், வெளிக்கதவு படனம் = படித்தல்
படாகை = விருதுக்கொடி
படாம் = சீலை, பெருங்கொடி, முகபடாம்
படி = ஒப்பு, குணம், சம்பளம், பூமி, விதம், உருவம், பிரதி, வேடம்,
கற்படி, வகை, முறைமை
படிகம் = பளிங்கு