பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டாரகர்

266

பண்டகன்




  
பட்டாரகர் = குருக்கள், இருடிகள்
பட்டி = அட்டவணை, கள்வன், ஆட்டுக்கிடை, களவு, மனமடக்க மற்றவன், திருட்டுமாடு, சீலை, மந்தை, நாய், விபசாரி, இடம், சிற்றூர், வெற்றிலைச் சுருள்
பட்டிகர் = திருடர்
பட்டிகை = அரைநாண், ஏடு, யோகப்பட்டி, தெப்பம், செவ்வந்தி, அரசபத்திரம், அரைக்கச்சை
பட்டிக்காடு = காட்டிற்குள் ஊர்
பட்டினவர் = செம்படவர்
பட்டு = சிற்றூர், கட்டியம்
பட்டோலை = அரசர் விடும் கடிதம், காரியக் குறிப்பு எழுதும் ஓலை
பணச்சலுகை = செல்வச் செருக்கு
பணதரம் = பாம்பு
பணதி = ஆபரணம், வேலைப்பாடு, செயல், கற்பனை
பணம் = பொன், விலை, பாம்பின்படம், யானையை நடத்தும் ஆயுதம்
பணயம் = பந்தயம், அடகு
பணவை = பரண், பேய், கழுகு
பணாடவி = ஆதிசேஷன்
பணாமணி = நாகரத்தினம்
பணி = ஆபரணம், விதி, தொண்டு, கட்டளை, பணிதல், தொழில், பாம்பு, சொல்
பணிக்கன் = உபாத்தியாயன், யானைப்பாகன், அம்பட்டன்
பணிக்களரி = தொழிற் செய்யும் இடம்
பணிக்கு = திருத்தம்
பணிக்கை = நேர்த்தியான செய்கை, பணிதல்
பணிதம் = பந்தயப்பொருள்
பணித்தல் = சொல்லல், குறைத்தல், மிதித்தல், ஏவுதல், தாழ்த்துதல், கொடுத்தல்
பணிமொழி = நன்மொழி
பணியார் = பகைவர்
பணிலம் = சங்கு, முத்து
பணை = அரசமரம், பருமை, மரக்கொம்பு, முரசு, பறை, மிகுதி, மூங்கில், வயல், பந்தி, குதிரை யானை தங்குமிடம், மருதநிலம்
பணைத்தல் = பருத்தல், பிழைத்தல், செழித்தல்
பண் = பாட்டு, இசை, சீர், கல்லணை, நீர்நிலை, தகுதி, அலங்காரம்
பண்டகன் = அலி