பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அளித்தல்

24

அறனோம்படை


அளித்தல் = கொடுத்தல், காத்தல், பிள்ளையாகப் பெறுதல்,
அருள் செய்தல், சொல்லுதல்
அளித்து = இரங்கத்தக்கது
அளிந்தம் = நகர வாயில், திண்ணை, முற்றம்
அளியர் = எளியோர், அருளுடையோர், அருள் பெறற்குரியர்
அளை = தயிர், புற்று, குகை, மோர், வளை, வெண்ணெய், நண்டு, மலைக்குகை
அளைஇ = கலந்து
அளைதல் = கலத்தல், அநுபவித்தல், புரளுதல், குழைதல், தழுவுதல்
அள் = காது, கூர்மை, நெருக்கம், ஆக்கம்
அள்ளல் = சேறு, நரகம்
அள்ளு = அளவு, கூலித்தானியம்
அள்ளுதல் = நெருங்குதல், செறிதல், வாரியெடுத் தல்
அள்ளூறல் = வாய் ஊறல்
அற = முற்ற, மிக
அறக்கடவுள் = யமன்
அறக்காடு = சுடுகாடு
அறக்கூழ்ச்சாலை = தருமச் சோறிடும் இடம்
அறக்கொடி = பார்வதி
அறச்செல்வி = பார்வதி
அறத்தவிசு = நியாயபீடம்
அறத்தின்சேய் = தருமபுத்திரன்
அறப்புறம் = தருமசாலை, ஓதுவிக்கும் சாலை, தருமத்திற்காக விடப்பட்ட வரியிலா நிலம், பாவச் செயல்
அறம் = புண்ணியம், தருமம், யமன், கடமை, கற்பு, இல்லறம், துறவறம், அறநூல், அறக்கடவுள்
அறம்பாடல் = வசைக்கவி பாடுதல்
அறல் = கருமணல், கடல் அலை, நீர், அறுதல், நெறி, புதர்
அறவர் = முனிவரர், வேதியர், பெரியோர்
அறவன் = புத்தன், புண்ணியன், அறவாழியந்தனன், கடவுள், அருகன்
அறவாழி = தருமசக்கரம், தருமக்கடல்
அறவிருத்தம் = தருமத்திற்கு மாறுபட்டது
அறவோர் = முனிவர், அருகர், அந்தணர்
அறனோம்படை = தருமம் போதிக்கும் இடம், தருமம் பாதுகாக்கும் இடம்