பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரிக்கிரகம்

273

பரிபாஷை


  
பரிக்கிரகம் = மனையாள், சபதம்
பரிக்கிரமம் = சுற்றுதல், அலைந்து திரிதல்
பரிசம் = தொடுதல், ஒரு புலன், பெண்ணிற்குக் கொடுக்கும் வெகுமதி
பரிசயம் = பழக்கம், உறவு
பரிசனம் = உறவு, ஏவல், செய்வோர் தொடுதல்
பரிசனவேதி = இழிந்த லோகங்களை பொன்னாக்கும் மருந்து
பரிசாரகம் = ஏவல்வேலை, வணக்கம், சமையல் தொழில்
பரிசிரமம் = பிரயாசம்
பரிசு = பண்பு, விதம், கொடை, பெருமை
பரிசுத்தாத்மா = மகாஞானி
பரிசை = கேடகம்
பரிச்சயம் = பழக்கம்
பரிச்சேதம் = நூற்களின் உட்பிரிவு, பகுத்தறிதல், எல்லை முழுமை
பரிஞ்ஞானம் = அறிவு
பரிஷ்காரம் = தெளிவு
பரிணதன் = பரிபக்குவ முடையவன், அறிஞன்
பரிணமித்தல் = வேறுபடல்
பரிணயம் = திருமணம்
35
பரிணாமம் = வேறுபாடு, விகாரம்
பரிதல் = ஆறுதல், இரங்கல், அழித்தல், விரைதல், அன்போடு பேசுதல், வருந்துதல், ஓடுதல், பகுத்தறிதல்
பரிதாகம் = வெம்மை
பரிதாபம் = வெம்மை , பெருந்தாகம், இரக்கம்
பரிதானம் = கைக்கூலி, பொருள் கொடுத்துப் பொருள் வாங்குதல்
பரிதி = சக்கராயுதம், சூரிய வட்டம், தேருருளை
பரித்தல் = காத்தல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், தாங்குதல், ஓடுதல், அறுத்தல்
பரித்தியாகம் = முற்றும் விடுதல்
பரித்தியாகி = சந்நியாசி
பரித்திராசம் = பெரும்பயம்
பரிபக்குவம் = ஏற்றபக்குவம்
பரிபவம் = அவமானம், இகழ்ச்சி, தோல்வி, எளிமை
பரிபாகம் = சாமர்த்தியம், முதிர்ச்சி, சமைக்கை, பக்குவம்
பரிபாஷை = குழுஉக்குறி, குறியீடு