பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறன்கடை

25

அற்றம்


அறன்கடை = பாவம், பாவநெறி
அறிஞன் = புதன், புத்தன், புலவன்
அறிமடம் = அறிந்தும் அறியார் போன்றிருத்தல்
அறியாமை = ஆணவம், அறிவினம்
அறிவரன் = அருகன்
அறிவர்சிறப்பு = இறைவர் பூசனை
அறிவழி = கள், பிசாசு
அறிவறை = அறிவற்றவன்
அறிவன் = சிவன், அருகன், கடவுள், கம்மாளன்
அறுகரிசி = அட்சதை
அறுகால் = வண்டு
அறுகு = புல், சிங்கம், யானை, யாளி
அறுகுணன் = கடவுள்
அறுகுறை = முண்டம்
அறுகை = அதறுகம்புல்
அறுதி = முடிவு, சொந்தம், வரையறுத்தல்
அறுதொழிலோர் = பார்ப்பனர்
அறுபதம் = வண்டு
அறுமணை = அரிவாள்மணை
அறுமீன் = கார்த்திகை நட்சத்திரம்
அறுமை = நிலையின்மை, ஆறு
அறும்பு = பஞ்சகாலம்
அறுவை = உடை, சிலை, சித்திரை நட்சத்திரம்
அறை = அடி, பாத்தி, ஒலி, வகுத்த இடம், பாசறை, சொல், கற்பாறை, குகை, வஞ்சனை, மாளிகை, திரை, அற்றது, வஞ்சினம், குன்று, மலையுச்சி
அறைகூவல் = போருக்கு அழைத்தல்
அறைதல் = சொல்லல், ஒலித்தல், கடாவுதல், மோதல், துண்டித்தல்
அறைபோதல் = வஞ்சித்தல், அற்றுப்போதல்
அறைவாய் = மலைவழி
அற்கம் = அடக்கம், விலை, திரவியம்
அற்கல் = அடைதல், தங்குதல், நிலைபெறுதல்
அற்சிரம் = முன் பனி
அற்புதம் = அழகு, அதிசயம், ஓர் எண்
அற்றம் = அழிவு, சோர்வு, துன்பம், மெலிவு, குற்றம், சமயம், அவமானம், பொய், குறைவு, வறுமை, மறைவு, மறைக்கத்தக்க உறுப்பு